Sabarimala Ayyappa Temple Golden Robe Procession for Mandala Puja will depart from Aranmula on 23rd December 2025 Google
ஆன்மிகம்

23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம் : 27ம் தேதி மண்டல சபரிமலையில் பூஜை

Sabarimala Ayyappa Temple Thanga Angi Oorvalam 2025 Date in Tamil : மண்டல பூஜைக்கான தங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது

Kannan

Sabarimala Ayyappa Temple Thanga Angi Oorvalam 2025 Date in Tamil : பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையாகும்.

சபரிமலையில் மண்டல பூஜை

அதன்படி, மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி,திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆண்டுகளை விட இம்முறை சபரிமலையில் நடை திறந்த அன்று முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்

தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது. கடந்த ஒரு மாதத்தில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

27ம் தேதி மண்டல பூஜை

பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெறும். திருவிதாங்கூர் மன்னர் சபரிமலைக்கு காணிக்கையாக வழங்கிய இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்

ஆண்டுதோறும் மண்டல பூஜைக்கு அணிவிப்பதற்காக இந்த தங்க அங்கி இங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ம் தேதி காலை 7 மணிக்கு புறப்படுகிறது.

ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தப்படும்

கோழஞ்சேரி, ஓமல்லூர், கோன்னி, பெருநாடு, நிலக்கல் வழியாக 26ம் தேதி மதியம் 1.30 மணியளவில் பம்பையை அடையும்.இங்கு பக்தர்கள் தரிசனம் செய்த பின்னர் சரங்குத்தி வழியாக அன்று மாலை ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் தங்க அங்கியை ஏற்று வாங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். மறுநாள் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும்.

ஜனவரி 14ம் தேதி மகரஜோதி தரிசனம்

அதனுடன் மண்டல பூஜை நிறைவு பெற்று கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்கான ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். 14ம் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

=-============