Sabarimala Ayyappa Temple Mandala Pooja 2025 Begins With Devotees Chant Check Opening Dates 2025 in Tamil Google
ஆன்மிகம்

Sabarimala : சபரிமலை நடை திறப்பு 2025 - தொடங்கியது மண்டல காலம்!

Sabarimala Ayyappa Temple Mandala Pooja 2025 : 48 நாட்கள் மண்டல பூஜையாக கருதப்பட்டு விரதம் தொடங்கும் நாளான முதல் நாளாக சபரிமலையில் பக்தர்கள் கோஷத்துடன் நடை திறக்கப்பட்டது.

Bala Murugan

ஐயப்ப பக்தர்கள் விரதம்

Sabarimala Ayyappa Temple Mandala Pooja 2025 : தமிழகம் மட்டுமல்லாது உலக முழுவதும் ஒவ்வொரு மதங்கள் மற்றும் இனங்களில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் உண்டு. அதிலும், சில நாடுகள், கண்டங்கள் என அதன் வழிபாடு முறைகள் மாறும் மற்றும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.

உலக அளவில் பக்தர்கள் வருகை

அதன்படி, ஐயப்ப சுவாமி என்றால் தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் பக்தர்கள் மற்றும் கோவில்கள் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கார்த்திகை மாதம் ஆரம்பமாகி விட்டால், இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் தங்களின் இஷ்ட தெய்வங்களை வேண்டி ஒரு மண்டலம், ஒரு மாதம் என தொடங்கி அசைவம் தவிர்த்து தங்களின் எண்ணங்கள் போல விரத முறை மேற்கொள்வார்கள். அதன்படி தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர்.

சபரிமலை நடைதிறப்பு

இந்நிலையில், உலக முழுவதும் கார்த்திகை மாதத்தில் மாலை இடும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசப்பது வழக்கம். அதனால், சபரிமலை ஐயப்ப கோவிலில் இருந்து வரும் ஒவ்வொரு செய்தி மற்றும் அறிவிப்புகளை ஐயப்ப பக்தர்கள் உற்று நோக்கி தெரிந்து கொள்வர். அதன்படி இந்த ஆண்டு மண்டல விரதத்தின் முதல் நாளாக சபரிமலை நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது.

முதல் நாள் பூஜை தொடக்கம்

அதைப்போல் இந்த ஆண்டு தொடங்கிய முதல் நாள் பூஜை, 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்த போது, பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து, கோவிலை வலம் வந்த மேல் சாந்தி, 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். பின், 18 படிகளுக்கு கீழே இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகள், சபரிமலை பிரசாத் நம்பூதிரி , மாளிகைப்புறம் மனு நம்பூதிரியை கைப்பிடித்து அழைத்து வந்தார். பின்னர், அய்யப்பன் சன்னிதி முன்புறம் வந்ததும் அவர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது.

நடை அடைப்பு

இதைத்தொடர்ந்து, புதிய மேல் சாந்தி மாலை, 6:30 மணிக்கு சன்னிதி முன் நடந்த சடங்கில், சபரிமலை புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரிக்கு, தந்திரி மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி சன்னிதிக்குள் அழைத்து சென்றார்.

இதுபோல, மாளிகைப்புறம் கோவில் முன்புறம் நடந்த சடங்கில், மனு நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மண்டல பூஜை தொடங்கியது

வழக்கம்போல், காலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது. தொடர்ந்து, தந்திரி மகேஷ் மோகனரரு, அய்யப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவங்கி வைத்தார்.டி

அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

சம்பர் 27 வரை எல்லா நாட்களிலும் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 முதல், 11:30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 3:30க்கு கணபதி ஹோமம், 7:30க்கு உஷ பூஜை, 12:00-க்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், 12:-30க்கு உச்சபூஜை முடிந்து மதியம், 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஆன்லைன் முன்பதிவு விவரம்

அதன்படி, ஆன்லைன் முன்பதிவு மீண்டும் மதியம், 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை, 6:30-க்கு தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9:30 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

தினமும் 90,000 பக்தர்கள்

ஆண்டுதோறும் வேறு நாடுகள், மாநிலங்கள், ஊர்களில் இருந்து வருவோர் ஆன்லைன் வழியாக தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்வர். தினமும் ஆன்லைன் முன்பதிவில், 70,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில், 20,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.