Sani Peyarchi 2026,Thirunallaaru temple  source: google
ஆன்மிகம்

Sani Peyarchi 2026 : திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா : லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு!

சனிப்பெயர்ச்சி இன்று காலை 8:24 மணிக்கு நடைபெற்றது. இதில் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானார்.

S Kavitha

சனிப்பெயர்ச்சி 2026

வாக்கிய பஞ்சாங்கப்படி, இன்று காலை 8:24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார்.

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி வழிபாடு

இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பால்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். இப்போது கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார்.

சனிப்பெயர்ச்சி அபிஷேகம்

இதன் காரணமாக திருநள்ளாறில் இன்று காலை சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் சந்தனம், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், தயிர் முதலானவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

சனிபகவான் தனி சந்நதி

தனி சந்நதியுடன் அமைந்துள்ள பிரணாம்பிகை , தர்பாரண்யேஷ்வரருக்கு வஜ்ர அங்கி அணிவிக்கப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

தீபாராதனை

பின்னர் சனிப்பெயர்ச்சி நிகழ்விற்காக நெய்வேத்தியம் செய்யப்பட்டபின் சந்நதி முழுமையாக திரையிடப்ப்பட்டு, பெயர்ச்சியின் போது சரியாக 08.24 மணிக்கு திரை விலக்கப்பட்டது. பின்னர் தர்பாரண்யேஷ்வரருக்கு தீபாராதனை காட்டப்பட்டு, மக்களும் வழிபாடு செய்தனர்.

சனிப்பெயர்ச்சி

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயரும் நிகழ்வு தான் சனிப்பெயர்ச்சி. பொதுவாக சனி மெதுவாக நகரும் கிரகம் என்பதால், ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருந்து அதன் பின் தான் அடுத்த ராசிக்கு மாறும் .

இந்த பெயர்ச்சியானது பன்னிரண்டு ராசிகளிலும், அதிலும் குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம சனி அல்லது அர்த்தாஷ்டம சனி நடப்பவர்களுக்கு, பலவிதமான வாழ்க்கை மாற்றங்களையும், சவால்களையும் ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி 2026

இந்த ஆண்டிற்கான சனிப்பெயர்ச்சி இன்று காலை 8:24 மணிக்கு நடைபெற்றது. இதில் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானார்.

11 ஆம் இடத்தில் ரிஷபம், 10 ஆம் இடத்தில் மிதுனம் , 9ஆம் இடத்தில் கடகம் மற்றும் 6 ஆம் இடத்தில் உள்ள துலாம் ஆகிய ராசிகளுக்கு இந்த சனிப் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:

கும்பம் ராசிக்கு பாத சனி, மீனம் ராசிக்கு ஜென்ம சனி, மற்றும் மேஷ ராசிக்கு விரய சனி என இந்த ராசிகளுக்கு ஏழரை சனி காலம் ஆகும்.

அதேபோல் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி காலம் தொடங்குகிறது. கன்னி ராசிக்கு இது கண்டக சனி காலம். தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி காலம் என கணிக்கப்பட்டுள்ளது.