திருப்பரங்குன்றம் வழக்கு விசாரணை விவரம்
Thiruparankundram Deepam Issue : நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் அரசு தரப்பு, கோயில் தரப்பு, மனுதாரர்கள் தரப்பு, தர்கா தரப்பு, காவல்துறை தரப்பு ஆகியோர் இந்த வழக்கு விசாரணையில் வாதிட்டனர்.
இந்த விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல இந்துதுவா அமைப்புகள் தங்களின் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்
இந்த வழக்கினை ஒத்திவைத்துள்ள நீதிபதிகள் எழுத்துப்பூர்வமான வாதங்களை நாளைக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டபோது, “மனுதாரர் பக்தராக வரவில்லை, சொத்தில் உரிமை கோருவது போல வந்துள்ளார். இது தீபம் ஏற்றக் கோரிய வழக்கா அல்லது சொத்துரிமை கோரிய வழக்கா என்று தெரியவில்லை” என்று கூறினார்.
மனுதாரர் தரப்பு வாதம்
மேலும், “தனி நீதிபதி உத்தரவில் ஏற்கனவே உள்ள பழக்கவழக்கப்படி மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே மலை உச்சியில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில் குறுகிய நேரத்தில் பதிலளிக்க அனுமதி பெற்று வாதிடப்பட்டது. “இரண்டு விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது: ஒன்று அது தீபத்தூண் இல்லை என்பது, மற்றொன்று அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது இல்லை என்பது. இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று மனுதாரர் தரப்பு வாதிட்டது.
வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
இதைத்தொடர்ந்து, கோயில் தரப்பு, தர்கா தரப்பு, காவல்துறை தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான அவமதிப்பு வழக்கையும் தனி நீதிபதி சுவாமிநாதனே விசாரிப்பார் என்று முன்பு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு திருப்பரங்குன்றம் மலையில் கோயில் பாரம்பரியம் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான முக்கியமான ஒன்றாகும். அரசு தரப்பு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை வலியுறுத்த, மனுதாரர் தரப்பு பாரம்பரிய உரிமையை வலியுறுத்துகிறது. தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்க்பபட்டதற்கு இந்து ஆன்மீக வாதிகள் பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இதற்கு முறையான தீர்ப்பு வேண்டி தங்களது விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
====