This year's Amarnath pilgrimage has begun amidst a spirit of devotional fervor google
ஆன்மிகம்

Amarnath Yatra 2026 : அமர்நாத் பனிலிங்க தரிசனம் : பக்தி பரவசத்துடன் துவக்கம் : 4 லட்சம் பேர் வழிபட ஏற்பாடு...!

இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை பக்தி பரவசத்துடன் தொடங்கி இருக்கிறது.

Kannan

இமயமலையில் அமர்நாத் கோவில்

தெற்கு காஷ்மீரில் இமயமலை பகு​தி​யில் அமர்நாத் குகைக் கோவில் அமைந்​துள்​ளது. இந்​துக்​களின் புனிதத் தலங்களில் ஒன்​றான இந்த புனித தலம், கடல் மட்​டத்​தில் இருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்​ளது.

அமர்நாத் புனித யாத்திரை

இந்த கோயி​லில் ஆண்டுதோறும் இயற்​கை​யாக தோன்​றும் பனி லிங்​கத்தை தரிசிக்கலட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரை மேற்​கொள்வது வழக்கம்.

பக்தர்கள் புனித யாத்திரை

அனந்த்​நாக் மாவட்​டத்​தில் உள்ள பாரம்​பரி​யமான 48 கி.மீ. தூர நுன்வான்​-பஹல்​காம் வழித்​தடம் மற்​றும் கந்​தர்​பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய ஆனால் செங்​குத்​தான 14 கி.மீ. தூரபல்​தால் வழித்தடம் மூல​மாக இந்த புனித யாத்​திரை மேற்கொள்ளப்படு​கிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான அமர்​நாத் புனித யாத்​திரை பஹல்​காம், பல்தால் அடிவார முகாம்​களில் இருந்து இன்று தொடங்கியுள்​ளது.

புனித பயணத்தை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

4,800 பேர் புனிதப் பயணம்

ஹர ஹர மகாதேவ் உள்​ளிட்ட பக்தி முழக்​கங்​களுக்கு மத்​தி​யில்,பனி லிங்கத்தை தரிசிக்க முதற்கட்டமாக 4,800-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் வாக​னங்​களில் புறப்​பட்​டுச் சென்றனர்.

பெண்கள், சாதுக்கள் யாத்திரை

முதல் குழுவில் 816 பெண்கள், சாதுக்கள் உட்பட மொத்தம் 4,822 பக்தர்கள் இடம் பெற்றுள்ளனர். 57 நாட்கள் நீடிக்​கும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 28ம் தேதி நிறைவடையும்.

3.90 லட்சம் பேர் பதிவு

இந்த ஆண்டு அமர்​நாத் யாத்​திரை செல்வதற்கு 3.90 லட்சத்திற்கும் அதி​க​மான பக்​தர்​கள் பதிவு செய்​துள்​ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், பக்தர்கள் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வசதிக்காக அனைத்து பக்தர்களுக்கும் R.F.I.D. கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பனி லிங்கத்தின் சிறப்பு

அமர்நாத் குகையில் இயற்கையாக உறைந்த பனியால் உருவாகும் சிவலிங்கம் ‘அமர்நாத் லிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. குகையின் மேற்பகுதியில் இருந்து சொட்டும் நீர் உறைந்து இந்த லிங்கத்தை உருவாக்குகிறது.

இது பார்வதி மற்றும் விநாயகரைக் குறிக்கும் சிறிய பனி வடிவங்களோடு சேர்ந்து அமைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் (ஸ்ரவண மாத பௌர்ணமி) மாதம் வரையிலான கோடைக்காலத்தில் இந்த லிங்கம் அதிகபட்ச அளவை அடைகிறது

----------