Tirupati Brahmotsava festival, Lord Malayappa Swamy, riding on Anumantha Vahana 
ஆன்மிகம்

Tirumala Brahmotsavam : அனுமந்த வாகனத்தில் மலையப்பர் வீதியுலா

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் ஆறாம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Kannan

திருமலை பிரம்மோற்சவ விழா :

Brahmotsavam Celebrations Underway at Tirumala : உலகப் புகழ் பெற்ற திருமலை ஏழுமலையான் கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை தோறும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளும் பெருமாள், மாட வீதிகளில் பவனி வருகிறார்.பிரம்மோற்சவத்தை ஒட்டி, திருமலை விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

சிறப்பாக நடைபெற்ற கருடசேவை :

மலையன் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களிலும் சுவாமி விழாவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருட சேவை நேற்று நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நான்கு மணி மாட வீதிகளில் சுவாமி வீதியுலா நடந்தேறியது. இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அனுமந்த வாகனத்தில் பெருமாள் :

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று பக்தர்களின் கோவிந்தா முழக்கத்திற்கு மத்தியில் அனுமந்த வாகனத்தில் மலையப்பர் சாமி வீதியுலா வந்தார். திரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமனை வாகனமாக கொண்டு கோதண்ட ராமராக வீதியுலா வந்தார் ஏழுமலையான்

களைகட்டிய கலை நிகழ்ச்சிகள் :

18 மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநிலத்தினுடைய கலை, பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக இந்த கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அனுமந்த வாகனத்தில் வந்த மலையப்ப சுவாமியை பொதுமக்கள் சேவித்தனர்.

மாலையில் தங்க ரதம், இரவில் கஜ வாகனம் :

இன்று மாலை 32 அடி உயரத்திலுள்ள தங்க ரதத்தில் வந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருப்பதி பெருமாள் வருகிறார். பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்க இந்த விழா நடைபெற இருக்கிறது. பின்னர் இன்று இரவு கஜ வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

===========