Tirupati, Rameswaram, Madurai: IRCTC 12-Day Spiritual Tour — full Details! source:google
ஆன்மிகம்

திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை: IRCTC 12 நாள் ஆன்மிக சுற்றுலா, முழு விவரம் !

IRCTC SPIRITUAL TOUR PACKAGE 2026 : 12 நாள் ஆன்மிக சுற்றுலாவின் போது தங்கும் இடம், மூன்று வேளை உணவு, பயண காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது.

S Kavitha

IRCTC SPIRITUAL TOUR PACKAGE 2026:

IRCTC Spiritual Tour Package To Tirupati, Rameshwaram and Madurai : ஆன்மிக பக்தர்களுக்காக இந்தியன் ரயில்வே மற்றும் சுற்றுலா கழகம் ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஆன்மிக சுற்றுலா பயணம்

புனித யாத்திரை மேற்கொள்ளும் ஆன்மிக பக்தர்களுக்காக இந்தியன் ரயில்வே மற்றும் சுற்றுலா கழகம் ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

குறைந்த செலவில் ஆன்மிக பயணம்

IRCTC -யின் இந்த ஆன்மிக சுற்றுலாவில் திருப்பதி ஏழுமலையான் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முதலான கோவில்களுக்கு குறைந்த செலவில் சென்று வழிபடலாம் .

சிறப்பு ரயில்

IRCTC தற்போது தக்ஷின் பாரத் யாத்ரா என்ற சிறப்பு ரயில் சுற்றலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆன்மிக சுற்றுலா தொகுப்பின் கீழ் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஏப்ரல் 24 ஆம் தேதி முதல்

அதன்படி பாரத் கௌரவ் சிறப்பு ரயில் ஏப்ரல் 24ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் இருந்து ஆன்மிக சுற்றுலா பயணத்தை தொடங்குகிறது.

சிறப்பு ரயில் செல்லும் வழி

பிரோஸ்பூரில் இருந்து புறப்படும் பாரத் கௌரவ் சிறப்பு ரயில், பதிண்டா, சிர்சா, ஹிசார் சந்திப்பு, ஜகல், துரி, லூதியானா சந்திப்பு, எஸ்ஏஎஸ் நகர், சண்டிகர், அம்பாலா கான்ட்,

குருக்ஷேத்ரா, கர்னல், பானிபட், டெல்லி சஃப்தர்ஜங், மதுரா சந்திப்பு, குவாலியர் சந்திப்பு வழியாக செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

நின்று செல்லும் இடங்கள்

மேலும் இந்த ரயில், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,ராமேஸ்வரம், மதுரை

இந்த ஆன்மிக சுற்றுலாவின் போதுதான், திருப்பதி ஏழுமலையான் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முதலானவற்றை தரிசனம் செய்ய முடியும்.

இந்த ஆன்மிக பயணமானது பக்தர்களுக்கு வசதியாகவும், பாதுகப்பானதாகவும் இருக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்மிக சுற்றுலா பயண விவரங்கள்

இந்த 12 நாள் ஆன்மிக சுற்றுலாவின் போது தங்கும் இடம், மூன்று வேளை உணவு, பயண காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது.

ஆன்மிக சுற்றுலா கட்டணம்

மேலும் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள ஒரு நபருக்கு ரூ.35,995 வசூலிக்கப்படுகிறது. கம்ஃபர்ட் வகுப்புக்கு ஒரு நபருக்கு ரூ.41,750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி, சாதாரண வகுப்புகளுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது.

மேலும் விவரங்களுக்கு IRCTC -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.irctctourism.com பார்வையிட்டு, முன்பதிவு செய்துகொள்ளவும்.