Tirupati temple administration (TTD) decided to give priority to common people in Ezhumalayan Darshan Source : SVBC TTD
ஆன்மிகம்

ஏழுமலையான் தரிசனத்தில் மாற்றம் : சாமான்ய மக்களுக்கே முன்னுரிமை

Tirupati Tirumala Darshan : திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் இனி சாமான்ய மக்களுக்கே முன்னுரிமை வழங்குவது என, தேவஸ்தான நிர்வாகம் முடிவு எடுத்து இருக்கிறது.

Kannan

திருப்பதி ஏழுமலையான் கோவில்

Tirupati temple administration (TTD) decided to give priority to common people in Ezhumalayan Darshan : உலகப் புகழ் பெற்ற திருப்பதி-திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கானோர் வந்து, காணிக்கை செலுத்தி பெருமாளை சேவித்து செல்கின்றனர்.

சாமான்ய பக்தர்கள் - முதல் சாய்ஸ்

இந்தநிலையில், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் சாமானியர்​களுக்கு முன்​னுரிமை வழங்க பல்​வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

குலுக்கல் முறையில் டிக்கெட்

கடந்த ஆண்டு பிரம்​மோற்​சவத்தை சிறப்பான நடத்திய தேவஸ்தானம், 28 மாநிலங்​களை சேர்ந்த 6,976 கலைஞர்​களை பங்​கேற்க செய்து, கலை நிகழ்ச்சிகளை நடத்தியது.

முதன்​முதலாக இந்த முறை வைகுண்ட ஏகாதசிக்கு முதல் 3 நாட்​கள் குலுக்​கல் முறை​யில் ஆன்​லைன் டிக்​கெட்​டு​களை வழங்​கி, சிறப்​பாக தரிசன ஏற்​பாடு​களை செய்து இருந்தது. இது பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சாமான்ய மக்களுக்கே முன்னுரிமை

மீத​முள்ள 7 நாட்​களும் சாமானிய பக்​தர்​களுக்கே முன்​னுரிமை வழங்​கப்​பட்​டது. 10 நாட்​களில் 7.83 லட்​சம் பக்​தர்கள் சுவாமியை தரிசித்தனர். இதேபோல் ரத சப்​தமிக்​கும் சுமார் 3 லட்​சம் பக்​தர்​கள் வாகன சேவை​களை கண்​டு​களித்​தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம்

1985 முதல் திருப்பதி தேவஸ்தான் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. தற்போது தின​மும் சராசரி​யாக 2 லட்​சம் பக்​தர்​களுக்கு தரமான அன்​னபிர​சாதம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

கோவையில் ஏழுமலையான் கோவில்

கோய​முத்​தூர், மும்​பை, கர்​நாட​கா, அசாம், உள்​ளிட்ட இடங்​களில் வரும் ஜூன் மாதத்​திற்​குள் ஏழு​மலை​யான் கோயில் கட்ட பூமி பூஜை நடத்​தப்​படும்.

கோய​முத்​தூரில் ரூ.300 கோடி​யில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட நிதி உதவி செய்ய பக்​தர் ஒருவர் முன் வந்​துள்​ளார்.

விஐபி பிரேக் தரிசனம் குறைப்பு

ஏழுமலையான் கோவிலில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், விஐபி பிரேக் தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனங்கள் குறைக்கப்பட்டு, சர்வ தரிசனத்திற்கு (இலவச தரிசனம்) முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சாமான்ய பக்தர்களுக்கே முன்னுரிமை

* விஐபி பரிந்துரை கடிதங்கள் குறைக்கப்பட்டு, நேரடியாக வரும் பக்தர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கீடு.

* வைகுண்ட ஏகாதசி போன்ற பண்டிகை காலங்களில், 10 நாட்களுக்கு மேல் சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை

* விஐபிகளுக்கான முன் பதிவு குறைக்கப்பட்டு, சாதாரண பக்தர்களுக்கு தங்குமிடம் (CRO) ஒதுக்கீட்டில் முக்கியத்துவம்

* லட்டு பிரசாதம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள்

==============