திருப்பதி ஏழுமலையான் கோவில்
Tirupati Tirumala Darshan Ticket Online Booking in WhatsApp : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய நாட்கள் என்றால், இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
’மன மித்ரா’ சேவை
ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஏழுமலையான் தரிசன முறை
இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் பல சமயங்களில் 20 மணி நேரத்திற்கும் மேலாக கூட காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டி இருக்கிறது. சிறப்பு தரிசனத்தில் செல்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்யவேண்டும். அப்படி புக்கிங் செய்ய முடியாதவர்கள் வேறு நபர் மூலம் ஆன்லைன் புக்கிங் செய்து கொள்கிறார்கள்.
ஆப் மூலம் ஏழுமலையான் தரிசன டிக்கெட்
இந்தநிலையில், அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு ஆப் தான் வாட்ஸ் அப். இந்த ஆப் முலமே திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கான டிக்கெட் எடுத்து கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.
‘ஹாய்’ அனுப்பினால் தரிசன டிக்கெட்
ஆம், தேவஸ்தானம் அளிக்கும் நம்பருக்கு ஹாய் அனுப்புவதன் மூலம் உங்கள் டிக்கெட் புக்கிங் செயல்முறை எளிதாக முடிவுக்கு வருகிறது.
முதலில் நீங்கள் 9552300009 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் ஹாய் என்று அனுப்ப வேண்டும், பிறகு EN என்று டைப் செய்து அனுப்பினால், ஆங்கில மொழி தேர்வு செய்யப்படும். தெலுங்கு மொழி தெரிந்தவர்கள் அப்படியே தொடரலாம்.
எளிய முறை பக்தர்கள் வரவேற்பு
பின்னர் உங்களுக்கான தரிசன சேவையை தேர்வு செய்து டிக்கெட் புக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்தி டிக்கெட்டை பெறலாம். இதற்கு 5 நிமிடங்கள் கூட ஆகாது. இந்த எளிய முறை திருப்பதி பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ்அப் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு ;
மன மித்ரா சேவையின் வாட்ஸ்அப் நம்பரான 9552300009-ஐ உங்கள் மொபைலில் save செய்யவும்.
வாட்ஸ் அப்பில் இருந்து இந்த நம்பருக்கு "ஹாய்" என்று அனுப்பவும்.
தற்போது கிடைக்கும் ஆப்ஷன்களில் இருந்து "டெம்பிள் புக்கிங் சர்வீசஸ்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பாலாஜி தரிசன டிக்கெட் கிடைக்கும் தன்மையை பற்றிய விவரங்களை அது உங்களுக்கு வழங்கும்.
பணம் செலுத்தி விட்டு செயல்முறையை தொடரவும்.
பணம் செலுத்தப்பட்டதும் உங்களுடைய ஈ-டிக்கெட் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பப்படும்.
தொந்தரவு இல்லாமல் கோயில் நுழைவுக்கான டிக்கெட்டை டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம்
======