You can now get the Tiruchendur 'Panneer Leaf' Vibhuti Prasadam online: How to order... a simple process!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை அஞ்சல் வழியில் ஆன்லைனில் பெற HRCE புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஆன்லைன் பிரசாத சேவை அறிமுகம்
முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற பன்னீர் இலை விபூதி பிரசாதம் பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மிகவும் இஷ்டமான ஒன்றாகும்.
கோயில் நிர்வாகம் அறிவிப்பு
இனி பக்தர்கள் இந்த சிறப்புப் பிரசாதத்தைப் பெற கோயிலுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், ஆன்லைன் மூலமாகவே வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
திருச்செந்தூர் கோயிலில் பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து வழங்குவது காலம் காலமாகப் பின்பற்றப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த வழக்கமாகும்.
பன்னீர் இலை விபூதியின் தொகுப்பு
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் சிறப்புப் பிரசாதத் தொகுப்பில் பன்னீர் இலை விபூதியுடன் 100 கிராம் புட்டுமது, மூலவர் மற்றும் சண்முகரின் திருவுருவப்படம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தம் 160 கிராம் எடை கொண்ட இந்த சிறப்புப் பிரசாதத் தொகுப்பின் விலை ரூ. 120 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் எளிய முறை
இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ‘அஞ்சல் வழி பிரசாதம்’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு திரையில் தோன்றும் கோயில்களின் பட்டியலில் ஐந்தாவது வரிசையில் 45-வது கோயில் எண்ணாகத் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இடம்பெற்றுள்ளது.
இல்லம் தேடி வரும் பிரசாதம்
அந்த விருப்பத்தைத் தேர்வு செய்த பின், பக்தர்களின் பெயர், தெளிவான முகவரி மற்றும் தொடர்புக்கான தொலைப்பேசி எண் ஆகிய விவரங்களைப் பதிவிட்டுத் தேவையான தொகையை இணையவழியில் செலுத்த வேண்டும்.
இந்த எளிய நடைமுறைகளை முடித்தவுடன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் புனிதப் பிரசாதம் பக்தர்களின் இல்லம் தேடி நேரடியாக வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=====