10,663 special buses to operate convenience of people going to vote elections. Transport Corporation google
தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல்: வாக்களிக்க செல்லும் மக்களின் வசதிக்காக 10,663 சிறப்பு பேருந்துகள் : போக்குவரத்து கழகம் ஏற்பாடு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்களிக்க செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

Rohini

தமிழக சட்டபேரவை தேர்தல்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர அரசியல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இந்த நிலையில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் , அதனை ஒட்டி வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையின் முக்கியவழித்தடங்களிலில் இருந்து தமிழனின் பலவேறு பகுதிகளுக்கும் பெருந்தந்து இயக்கப்பட உள்ளது

அரசு விரைவு போக்குவரத்து கலகத்தின் அறிவிப்பு

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்த அறிவிப்பின் படி ,சென்னையிலிருந்து 3 நாட்களுக்கு 10,663 பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வரும் 21 முதல் 23ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 5,089 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரம்

தினசரி இயக்கப்படும் 5,089 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் மற்றும் கோவை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயங்கும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலூர் மற்றும் பெங்களூரு மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்

மாதாவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

முன்பதிவு மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

மேலும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் Mobile App மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

=============