10th Season: TNPL Cricket; Starts August 4; 8 Teams Participating. google
தமிழ்நாடு

10வது சீசன் : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் : ஆகஸ்ட் 4 முதல் ஆரம்பம் : 8 அணிகள் பங்கேற்பு...!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 10வது ஆண்​டாக நடை​பெறும் இந்​தப் போட்​டி​யில் மொத்​தம் 8 அணி​கள் பங்​கேற்​க உள்ளன.

Rohini

டிஎன்பிஎல் கிரிக்கெட் ஆகஸ்ட 4 முதல் ஆரம்பம்

தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் ​(டிஎன்சிஏ) நடத்​தும் ஸ்ரீராம் கேபிட்​டல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 முதல்நடை​பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,

10வது ஆண்டாக நடக்கும் போட்டியில் 8 அணிகள் பங்கேற்பு

தொடர்ந்து 10-வது ஆண்​டாக நடை​பெறும் இந்​தப் போட்​டி​யில் மொத்​தம் 8 அணி​கள் பங்​கேற்க உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்டம் குறித்த அறிவிப்புகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி இந்த சீசனின் முதல்​கட்ட ஆட்​டங்​கள் திண்​டுக்​கலிலும், இறுதிக்கட்ட ஆட்​டங்​கள் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தி​லும் நடை​பெறவுள்​ளன.

திண்​டுக்​கல்​லில் நடை​பெறும் போட்டிகளுக்கான டிக்​கெட் விலை அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் தலா ரூ. 200 என்​றும், சென்​னை​ போட்டிகளுக்​கான டிக்​கெட் விலை சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே ஸ்டாண்​டு​களுக்​கு(லோயர்) ரூ.100 என்​றும், சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே ஸ்டாண்​டு​களுக்​கு(அப்​பர்) ரூ.150 என்​றும், கேஎம்கே டெரஸ் பகுதிக்கு ரூ.300கேஎம்கே லோயர் பகு​திக்கு ரூ.500 என்றும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

டிஎன்பிஎல் தொடர் வீரர்கள் ,ஐபிஎல் அணியில் ப்ங்கேற்பு

குறிப்பாக டிஎன்பிஎல் தொடர் மூலம் ஆடிய நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், வருண் சக்கவர்த்தி ஆகியோர் இந்திய அணியிலும், ஷாரூக் கான், குர்ஜப்நீத்சிங்,

சித்தார்த், அம்பரீஷ் ஐபிஎல் அணிகளிலும் ஆடி வருகின்றனர். வீரர்கள் ஏலத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் சார்பில் அஸ்வந்த் வல்தாபா அதிகபட்சமாக ரூ.14.45 லட்சத்துக்கும், நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் யு முகிலேஷ் ரூ.13.7 லட்சததுக்கும் வாங்கப்பட்டுள்ளனர் என்பதும் கூறிப்பிடத்தக்கது

===========================