For long-distance bus passengers, purified drinking water bottles are available for ₹10 under a scheme  Ai Generated
தமிழ்நாடு

₹10க்கு “பயணி” குடிநீர் திட்டம் : அரசுப் விரைவு பேருந்துகளில் அறிமுகம் : மக்கள் மகிழ்ச்சி..!

நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் ₹10-க்கு வழங்கும் திட்டம் முதற்கட்டமாக SETC பேருந்துகளில் செயல்படுத்தப்படுகிறது.

Rohini

பயணிகளுக்கு பயனுள்ள ஒரு திட்டம்:

தமிழக போக்குவரத்துத் துறையில் முக்கிய அறிவிப்பாக, “பயணி” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ₹10-க்கு குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் “அம்மா குடிநீர்” என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

முதற்கட்டமாக SETC தொலைதூரப் பேருந்துகளில் அறிமுகம்:

இது குறித்து பார்க்கையில், இந்தத் திட்டம் முதற்கட்டமாக 1,080-க்கும் மேற்பட்ட தொலைதூர SETC பேருந்துகளில் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, அடுத்த கட்டமாக இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு

இது குறித்து பொதுமக்களிடம் பேசுகையில், இந்தத் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும், இந்தத் திட்டத்தை அரசு மற்ற அரசுப் பேருந்துகளிலும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

==========