AIADMK reduced to a mere ant: 15 MLAs ready to jump ship to TVK – Minister Sengottaiyan's remarks!
15 ADMK MLAs Ready to Join TVK Sengottaiyan Statement
அதிமுகவிலிருந்து 15 எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைய தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏக்கள் தாவப்போகிறார்களா?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனியாகக் கூடி ஆலோசனை நடத்திய சம்பவம் ஏற்கனவே பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 15 பேர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,
15 எம்.எல்.ஏக்கள் தாவத் தயார்
இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர் என்றும், தவெகவில் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டெறும்பாக மாறிய அதிமுக
"அதிமுகவிலிருந்து என்னை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். ஆனால் தற்போது நான் எங்கு இருக்கிறேன் என்று பார்க்க வேண்டும். யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாகத் தான் அதிமுகவின் தற்போதைய நிலைமை உள்ளது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் விஜய்க்குப் பாராட்டு
தேர்தல் களத்தில் பெரிய பேச்சுப் பேசியவர்கள் எல்லாம் இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டனர் என்றும், பலரால் களத்தில் கூட நிற்க முடியவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய்யைப் போல் ஒரு தலைவரைத் தான் பார்த்ததில்லை" என்றும் புகழ்ந்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டும் அரசியலும்
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் புதிய சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
===============