This 20% priority concession will fully benefit new applicants entering government service for the first time. source: ai
தமிழ்நாடு

தமிழ் வழியில் படித்தோருக்கு 20% அரசுப் பணியில் முன்னுரிமை : திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!

அரசுப் பணிகளில் முதன்முறையாக நுழையும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு இந்த 20% முன்னுரிமை சலுகை முழுமையாகப் பயன்படும்.

Kavitha prasanna

This 20% priority concession will fully benefit new applicants entering government service for the first time.

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்.

சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ் வழியில் கல்வி கற்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட PSTM சட்டத்தில் இருந்த தெளிவற்ற நிலைகளை நீக்கவும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து எழுந்த குழப்பங்களைத் தீர்க்கவும் இந்த புதிய திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

யாருக்கெல்லாம் தகுதி உண்டு?

  1. புதிய விண்ணப்பதாரர்கள்

    அரசுப் பணிகளில் முதன்முறையாக நுழையும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு இந்த 20% முன்னுரிமை சலுகை முழுமையாகப் பயன்படும்.

  2. முந்தைய நியமனங்கள் பாதுகாப்பு

    கடந்த 2010 செப்டம்பர் 7 முதல் இதுநாள் வரை இச்சலுகை மூலம் பணியில் சேர்ந்தவர்களின் பணி நியமனங்கள் செல்லும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

  3. பிற மாநிலத் தமிழர்கள்

    பிற மாநிலங்களில் தமிழ் வழியில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் தமிழகத்திற்கு வந்து தொடர்ந்து தமிழ் வழியில் படித்தவர்களும் இந்த முன்னுரிமையைக் கோரத் தகுதியானவர்கள்.

  4. உயர் பதவிக்கான வாய்ப்பு

    ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு மட்டுமே மீண்டும் இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடியும்.

யாருக்குத் தகுதி கிடையாது?

பிற மொழிகளைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்துவிட்டு, அரசுத் தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதுபவர்களுக்கு இந்த 20% இடஒதுக்கீடு முன்னுரிமை பெற தகுதி கிடையாது.

இதையும் படிங்க : வெங்காயம் விலை கடும் உயர்வு : கிலோ ரூ.110 வரை விற்பனை? இல்லத்தரசிகள் கவலை!

======