2026 Assembly Elections: Free Travel for Persons with Disabilities and Senior Citizens—MTC Makes Major Announcement!  google
தமிழ்நாடு

ஏப். 23 வாக்குப்பதிவு : மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம் மாநகரப் போக்குவரத்துக் கழகம்!

வாக்களிக்கச் செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, மாநகரப் போக்குவரத்துக் கழக சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

S Kavitha

Tamil Nadu Elections 2026: Free Bus Travel for Senior Citizens and Persons with Disabilities Heading Out to Vote!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று வாக்களிக்கச் செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, மாநகரப் போக்குவரத்துக் கழக சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

இது குறித்து மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,

கட்டணமில்லா பயணச் சலுகை

ஏப்ரல் 23, வாக்குப்பதிவு நாளன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யச் செல்லும்போது இந்தக் கட்டணமில்லா பயணச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

சலுகையைப் பெறுவது எப்படி?

மூத்த குடிமக்கள் வாக்களிக்க செல்லும் போது

  • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வயதுச் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து, நடத்துனரிடம் இலவச பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

  • வழக்கமான பயண டோக்கன்கள் இதற்குத் தேவையில்லை.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்லும் போது

  • யுடிஐடி (UDID) அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து இலவச பயணச் சீட்டைப் பெறலாம்.

கவனிக்க வேண்டியவை:

  • இந்தச் சலுகை ஏப்ரல் 23 தேர்தல் நாளன்று ஒரு நாள் மட்டுமே அமலில் இருக்கும்.

  • மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண கட்டணப் பேருந்துகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்.

  • வாக்களிப்பதில் இருக்கும் சிரமங்களைக் குறைக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.

======