2026 Assembly Elections: Which parties have what percentage of votes: An analytical view google
தமிழ்நாடு

2026 சட்டமன்ற தேர்தல் : எந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் : ஒரு அலசல்!

இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 34.92 சதவீத ஓட்டுகளுடன் 108 இடங்களை கைப்பற்றி வெற்றியை பதிவு செய்துள்ளது

Rohini

பெரும்பான்மையான வெற்றி

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி தன் வசப்படுதியது தவெக. இதன் மூலம் தமிழகத்தில் தனிம் பெரும் கட்சியாக உருவெடுதுள்ளது.

தமிழக தேர்தல் : வாக்கு சதவீதம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் , 1,72,26,209 பேர் தவெகவிற்கு வாக்கு அளித்து உள்ளனர் .. அதன்படி திமுக 24.19 சதவீதம் (1.19.29,144) ஓட்டுகளையும், அதிமுக 21.21 சதவீதம் (1,04,52,146) வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சி 4 சதவீதம் (19,72,537) வாக்குகளையும் பெற்றுள்ளது.

விஜயின் அரசியல் வருகை , அடிவாங்கிய வாக்குகள்

இந்த தகவல்களின் படி விஜய் கட்சியின் வருகையால் எந்த கட்சி அதிகம் பாதித்தது என கணக்கிடுகையில், திமுக.,விற்கு 13.11 சதவீதமும், அதிமுக.,விற்கு 12.08 சதவீதமும், நாதக.,விற்கு 2.58 சதவீதமும் ஓட்டு விகிதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில்...

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் ,பார்த்தால் திமுக.,விற்கு 55,01,035 வாக்குகளும் அதிமுக.,விற்கு 49,28,909 வாக்குகளும் , நாதக 10,69,770 வாக்குகளும் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளது.

திமுகவிடம் 3ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்று சாதனை

குறிப்பாக இந்த தேர்தலில், திமுக மற்றும் அதிமுக.,விடம் இருந்து 3ல் ஒரு பங்கு வாக்குகளை சுருட்டியிருக்கிறது விஜய் அலை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2021ல் திமுக பெற்ற ஓட்டுகளை விட 2026ல் தவெக 2,03,970 ஓட்டுகள் குறைவாகவே பெற்று ஆட்சி அமர இருக்கிறது தவெக

திமுக வின் முக்கிய அமைச்சர்களை வீழ்த்திய தவெக

தமிழ்நாடின் முக்கிய அமைச்சர்களை தவெகவின் புதிய வருகை சரிவை சந்திக்க வைத்துள்ளது .

மே 7 ல் பதவியேற்க திட்டம்

‘இந்த நிலையில் மே 7 ல் தவெக தலைவர் விஜய் பதவியேற்க திட்டம் என்று தெரிவிக்கப்படுல்ளது. சென்னை நேரு ஸ்டேடியதில் பதவியேபார் என்றும் தெரிகிறது

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி தன் வசப்படுதியது தவெக. இதன் மூலம் தமிழகதில் தனிம் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

===========