2026 Budget Presentation: ₹44,527 crore allocated to the School Education Department. google
தமிழ்நாடு

2026 பட்ஜெட் தாக்கல் :பள்ளி கல்வித்துறைக்கு 44,527 கோடி ஒதுக்கீடு;வெற்றி மடிக்கணினி, TN-SUDAR சிறப்பு நோக்கு மையம்.

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்துறை திறன் யிற்ச்சி வழங்கப்படும், மேலும் உயர்கல்விதுறைக்கு ரூ 2000 கோடிஒதுக்கப்பட்டுள்ளது

Rohini

தவெக அரசின் முதல் பட்ஜெட்

தவெக அரசு பொறுப்ற்ற பிறகு இரண்டு சட்டப்பேரவி கூட்டத்தொடரானது நிறைவடைந்திருக்கும் நிலையில்,2026 -2027 ஆம் ஆண்டிற்கான முதல் பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது ,

அந்த வகையில் ஏற்கனவே பெண்கள் , பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2026- 2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சட்டபேரவையில் தாக்கல்

2026 மற்றும் 27 ஆன் ஆண்டிற்கான முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார், அதி பள்ளி , கல்லூரி மாண்வர்களுக்கான முக்கிய் அறிவிப்புகளானது இடம்பெற்றுள்ளது , குறிப்பாக பள்ளிகளில் விளையாட்டில் கவன்ம் செலுத்தவும் , உயர்கல்வி துறைக்கு என்று முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது

பள்ளிகல்விதுறைக்கு 44,527 கோடி ஒதுக்கீடு

தவெக அரசின் பட்ஜெட்டில் பள்ளிகல்வி துறைக்கு என்று 44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,

அதாவது அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.2,132 கோடி ஒதுக்கீடு

மாணவர்களின் நலனுக்காக TN - SUDARஎன்ற பெயரில் சிறப்பு நோக்கு நிறுவனம்

போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்படும்.பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹெல்மேட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதி கொண்ட சைக்கிள்கள்,

ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி

ரூ.90 கோடியில் 5 தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்

சிறப்பு செயலாக்க திட்டத்துறைக்கு ரூ. 17,150 கோடிதொழிலாளர் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பட்ஜெட்டில் கவனம் பெற்றுள்ள விளையாட்டுதுறை

இந்த பட்ஜெட்டில் விளையாட்டுதுறைகென முக்கியமான அறிவிப்பானது வெளியாகியுள்ளது , குறிப்பாக பள்ளிகளில் வகுப்பு முடிந்ததும் விளையாட ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்

உள்ளாட்சி அமைப்புகளில் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் ,

தமிழகம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்களை அமைக்க ரூ.50 கோடி ,

அண்ணல் அம்பேத்கர் கல்வி உதவித் திட்டம் ரூ.131 கோடி ஒதுக்கீடு

ரூ.75 கோடியில் வெற்றி தொழில்முனைவோர் திட்டம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது

பள்ளி சீரமைப்புக்கென தனி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் தனியாக ,ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பானது வெளியாகியுள்ளது

பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ. 125 கோடி ஒதுக்கீடு..குறிப்பாக நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவப்படும் என்றும்

அரசு பள்ளிகளை நவீனமாக்க இந்த ஆண்டு மட்டும் ரூ.300 கோடி ஒதுக்கீடு,பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி, சீருடை, உணவு, பாடப்புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

============================