தமிழக வெற்றிக் கழகம்
TVK Application for TN Election 2026 : வருகிற 2026 தேர்தலுக்காக போட்டியிட விரும்புபவர்கள் 234 தொகுதிகளில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் பிப்ரவரி 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் வழங்கப்படும்
விருப்ப மனுக்கள் விநியோகம்
விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
தவெக செயலகம் அறிவிப்பு
மேலும் ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே நாட்டு மக்களின் தேவையை நம்மால் பூர்த்தி செய்ய இயலும் என்றும் ,இதற்கான முழு அறிவிப்பு குறித்த அனைத்து தகவலையும் கட்சின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ளது.
6ம் தேதி முதல் மனுக்கள்
இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.
பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
தேர்தல் பிரச்சார மாநில சட்ட பாதுகாப்பு குழு
மாநில சட்டப் பாதுகாப்பு குழுவில் மொத்தம் 25 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கட்சியின் பொருளாளர் வெங்கட் ரமணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்று உள்ளனர்.
சட்டம், அரசியல் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் அனுபவம் கொண்ட நபர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளதாக கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
தவெக தேர்தல் வாக்குறுதி குழு
இதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி குழுவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
தவெக நிர்வாகி அருண்ராஜ் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .