25 people died and many were seriously injured in an explosion at a cracker factory in near Virudhunagar google
தமிழ்நாடு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து : 25 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம் : விரைவில் உரிய நிவாரணம்!

விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமுற்றனர்.

Kannan

தனியார் பட்டாசு ஆலை

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ‘வனஜா’ என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

திடீர் வெடி விபத்து

இந்த ஆலையில் நேற்று 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் சோல்சா வெடி தயாரிக்கும் பணியின்போது உராய்வு காரணமாக திடீரென பட்டாசு மருந்துகள் வெடித்துச் சிதறின.

23 பேர் உயிரிழப்பு

இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. நான்கு அறைகள் இடிந்து தரைமட்டமானதில், அங்கு பணியில் இருந்தவர்களில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள்யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

கிடங்கும் வெடித்து சிதறியது

தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து மீட்பு பணிகள் ஈடுபட்டனர். அப்போது, பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த குடோனும் வெடித்துச் சிதறியதால், மீட்புப் பணியே மேற்கோள்ள முடியவில்லை. சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு வெடிகளின் அதிர்வு உணரப்பட்டது.

பின்னர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமற்றோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

13 பேர் படுகாயம்

இதனிடையே, இரவு 7.45 மணி அளவில் பட்டாசு ஆலையின் இன்னொரு அறை திடீரென வெடித்துச் சிதறியது. இதில், விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

உயிரிழப்பு அதிகரிப்பு

பட்டாசு ஆலை வெடி வித்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உரிமையாளர் தலைமறைவு

தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

தமிழக பாஜக தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிதார்.

விரைவில் நிவாரணம் அறிவிப்பு

விதிமீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருகிறது. தேர்தல் நேரம் என்பதால், நிவாரணம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்’’ என்றார்.

அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பு

வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் சோல்சா வெடிகள் தயாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேன்சி ரகபட்டாசுகள் தயாரிக்க அனுமதி இல்லை.

போலீசார் விசாரணை

இந்த நிலையில், தடையை மீறி மணி மருந்துகளைப் பயன்படுத்தி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆலை இயங்கியது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர்கள் இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

=====