டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், இனி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
டாஸ்மாக் துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் , எம்ஆர்பி விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலித்தாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்
திருத்தப்பட்ட ஊதிய உயர்வு
அதன்படி உதவி விற்பனையாளர்களுக்கு தற்போதைய ரூ.14,340-ல் இருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.15,530-ல் இருந்து ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களுக்கு ரூ.17,850-ல் இருந்து ரூ.22,313 ஆகவும் ஊதியம் உயர்த்தப்படுகிறது.
அரசுக்கு ரூ.110.74 கோடி செலவு
இதன்மூலம் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும். டாஸ்மாக் ஊழியர்களின் மொத்த ஆண்டு ஊதியச் செலவு ரூ.553.72 கோடியாக உயர்கிறது. இனி டாஸ்மாக் ஊழியர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்
ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரும்
மேலும் ஊதிய உயர்வுக்காக மதுபான விலை உயர்த்தப்படாது இந்த திருத்தப்பட்ட . ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது
கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை
அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும்.முன்னதாக கூடுதல் தொகை வசூலித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தற்போது இடைநீக்கம் செய்யப்படுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால் பணிநீக்கம் வரை நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், ஊதிய உயர்வுக்காக மதுபான விலை உயர்த்தப்படாது என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்
===================