3,000 cusecs water released from Mettur drinking water needs  google
தமிழ்நாடு

மேட்டூர் அணை குடிநீர் தேவைக்காக 3,000 கன அடி நீர் திறப்பு : பாசனத்திற்கு எப்போது?, காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்...

டிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000-இல் இருந்து 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Rohini

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீரானது திறக்கப்பட்டுள்ளது , அதன்படி குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000-இல் இருந்து 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக்குடிநீர் திட்டம் ,அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

குறிப்பாக காவிரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூர்-ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்டம், சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம், வேலூர் கூட்டு குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், மேட்டூர் நகராட்சி தனி குடிநீர் திட்டம், கோனூர் பி.என்.பட்டி,

வீரக்கல் புதூர் கூட்டு குடிநீர் திட்டம், காவேரிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைகளுக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்

மேட்டூர் நீர்திறப்பு அதிகரிப்பு

கடந்த வாரம் வரை குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

ஆனால் ,தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக காலை 8 மணிமுதல் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் திறப்பு , அணையில் நீர் இருப்பு குறைவு

குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் 78.90 அடியிலிருந்து 78.81 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 40.78 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 146 கனஅடியிலிருந்து 158 கனஅடியாக அதிகரித்துள்ளது , ஆனால் இருப்பின் அளவை விட குடிநீர்காக திறக்கப்படும் நீரின் அளவானது அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

காயும் டெல்டா மாவட்டங்கள்

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால், அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. எனவே, டெல்டாவில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி விட்டது.

-