Perarivalan Enrolls as an Advocate in the Very Same Court Where He Fought for Justice! source: google
தமிழ்நாடு

31 ஆண்டுகள் சிறைவாசம் : நீதிக்காகப் போராடிய அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்தார் பேரறிவாளன்!

பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், சிறைவாசிகளின் உரிமைகளுக்காகவும் பேரறிவாளன் வாதாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

S Kavitha

31 Years of Imprisonment: Perarivalan Enrolls as an Advocate in the Very Same Court Where He Fought for Justice!

புதிய மைல்கல்லையை எட்டிய பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சுமார் 31 ஆண்டுகால நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலையான பேரறிவாளன், ஒரு புதிய முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழிக்கறிஞராக பதிவு

எந்த நீதிமன்றத்தில் தனது விடுதலைக்காகவும் நீதிக்காகவும் பல ஆண்டுகள் காத்திருந்தாரோ, அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் முறைப்படி வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார்.

தாயின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

பேரறிவாளனின் விடுதலையை விட, அவரது தாய் அற்புதம்மாளின் அயராத உழைப்பும் போராட்டமும் தமிழக வரலாற்றில் முக்கியமானது.

அற்புதம்மாளின் போராட்டமும், தற்போதைய மகிழ்ச்சியும்

தனது மகனின் விடுதலைக்காக வயதான காலத்திலும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய அற்புதம்மாள், தற்போது தனது மகன் அதே நீதிமன்றத்தில் கறுப்பு அங்கி அணிந்து வழக்கறிஞராக நிற்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்.

பார் கவுன்சிலில் பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் (Bar Council of Tamil Nadu and Puducherry) பேரறிவாளன் ஏப்ரல் 27 ஆம் தேதி முறைப்படி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.

சிறையில் இருந்தபோதே பட்டப்படிப்பு

சிறையில் இருந்த காலத்திலேயே அவர் பல்வேறு பட்டப் படிப்புகளைப் பயின்று தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றவர்களுக்காக வாதாடுவார்?

தனது வழக்கிற்காகத் தானே சட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து போராடிய பேரறிவாளன், இனி வரும் காலங்களில் மற்றவர்களுக்கு நீதி பெற்றுத் தரும் வகையில் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடர உள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், சிறைவாசிகளின் உரிமைகளுக்காகவும் அவர் வாதாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

=====