436 schemes, 717 TASMAC shops closed! Bold decisions from the first cabinet meeting led by Chief Minister Vijay!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, முதல்வர் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 5) சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தொலைநோக்கு திட்டங்களுக்கு ஒப்புதல்
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கூட்டத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு அதிரடி முடிவுகள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துகொண்டார்.
436 புதிய திட்டங்கள் – இலக்கு நிர்ணயம்!
அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் தலா ஒரு தொலைநோக்கு திட்டங்களை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இணைந்து கலந்துரையாடி விரைவாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
436 திட்டங்கள்
மேலும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தவெக கூட்டணி அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களையும் சேர்த்து, மொத்தம் 436 திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை முக்கியமாகப் பின்வரும் ஐந்து அம்சங்களை உள்ளடக்கியவை:
இளைஞர்கள் மேம்பாடு மற்றும் மகளிர் மேம்பாடு.
விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வளர்ச்சி.
லஞ்சம் இல்லாத நல்லாட்சி.
போதை இல்லாத தமிழகம் உருவாக்குதல்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்!
"லஞ்சம், போதைப்பொருள் புழக்கம் இல்லாத ஆட்சியாக நமது ஆட்சி இருக்க வேண்டும்" என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் மிகக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தவெக அரசின் தீவிர நடவடிக்கைகள்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பரவியுள்ள கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதன் முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் மொத்தம் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
=====