8 member committee headed by BJP MP Hema Malini has been formed by the NDA investigate deaths in Karur stampede 
தமிழ்நாடு

Karur Tragedy : விசாரிக்க 8 பேர் கொண்ட NDA குழு : தலைமை ஹேமமாலினி

கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி விசாரிப்பதற்காக தேசிய ஜனநாய கூட்டணி சார்பில், பாஜக எம்பி ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Kannan

கருர் சம்பவம், விசாரணை :

கரூரில் நடிகர் விஜய் பேசிய பிரசார கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

என்டிஏ குழு விசாரணை :

இந்நிலையில், கரூர் சம்பவம் பற்றி விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை அளிப்பதற்காக பாஜ அகில இந்திய தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

தலைமை ஹேமமாலினி :

பாஜ எம்பியும் நடிகையுமான ஹேமாமாலினி தலைமையிலான இந்த குழுவில், அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் (தெலுங்கு தேசம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஏற்கனவே, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் தமிழக வெற்றிக் கழகம், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

========