A plot to topple the TVK government? Police issue summons to former ministers Senthil Balaji and Ashok—are arrests imminent?
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி?
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குதிரை பேரம்?
தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு திருவல்லிக்கேணி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தவெக எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தர முயற்சி?
சட்டசபை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், அதற்கு ஆதரவாக வாக்களிக்க தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தரவும் ஒரு கும்பல் முயன்றதாகக் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் வாக்குமூலம்
இது தொடர்பாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் 8 பேர் கைதாகினர். அவர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திங்கட்கிழமை நேரில் ஆஜராக சம்மன்
இதையடுத்து, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் பெற்றோர் இல்லத்தில் போலீஸார் சம்மனை நேரில் வழங்கினர். அதன்படி, இருவரும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
கைதாக வாய்ப்பு?
அசோக் குமார் முன்ஜாமீன் கோரியுள்ள நிலையில், செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்யவில்லை. வார இறுதி நாட்கள் என்பதால் உடனடியாக முன்ஜாமீன் பெறுவதும் கடினம். இதனால் திங்கட்கிழமை விசாரணைக்குப் பிறகு இருவரும் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், திமுக தரப்பிற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
=====