"A Prime Minister emerging from Tamil Nadu is the solution": Aadhav Arjuna stirs up a storm in the Assembly! ai
தமிழ்நாடு

'தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாவதே தீர்வு' : சட்டப் பேரவையில் புயலைக் கிளப்பிய ஆதவ் அர்ஜூனா..!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்: தமிழ்நாட்டிற்கு பிரதமர் வேட்பாளர் வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

Kavitha prasanna

"A Prime Minister emerging from Tamil Nadu is the solution": Aadhav Arjuna stirs up a storm in the Assembly!

தொகுதி மறுசீரைமைப்பு மசோதா

தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் உருவாக வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

முதல்வர் விஜய்யின் தீர்மானம்

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரைமைப்பு (Delimitation) மசோதாவுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (12-08-2026) முதல்வர் விஜய்யால் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பின்னர் விவாதத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் பேரவையில் முன்மொழியப்பட்டது.

'தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாவதே தீர்வு'

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "தமிழ்நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தாலும், அது தேசிய அரசியலில் சரியாகப் பிரதிபலிக்கவில்லை.

வட மாநில ஆதிக்கம் உருவாகும் சூழலைத் தடுக்க தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

வட மாநில ஆதிக்கம்

தொடர்ந்து அவர் பேசுகையில், தற்போது 5 முதல் 6 இந்தி பேசும் வட மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது.

மக்களவை இடங்கள்: மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-ஆகவே நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

பாதிப்பு அபாயம்: தென் மாநிலங்களுக்குத் தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்தினாலும் அது பாதிப்பையே ஏற்படுத்தும்.

ஒருங்கிணைந்த எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கும்போது, திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்யாமல் ஒன்றாக இணைந்து எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

நீட்டை விட ஆபத்தானது; குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றம்

மாநில சுயாட்சிக்காகக் மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் குரல் கொடுத்ததை நினைவுகூர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க. ஸ்டாலின் என்றும், 'நீட்' தேர்வை விடவும் தொகுதி மறுவரையறை தான் மாநில உரிமைக்கு மிக ஆபத்தானது என்றும் குறிப்பிட்டார்.

ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்

விவாதத்தின் முடிவில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத அதாவது மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும், தொகுதி மறுவரையறையை எதிர்த்தும் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

======