Aavin announced that there has been no reduction in the supply of 'Green Magic' milk, dismissing rumors shortage.  google
தமிழ்நாடு

”ஆவின் க்ரீன் மேஜிக் பால் தட்டுப்பாடு?” : விநியோகம் ஏதும் குறைக்கப்படவில்லை! : ஆவின் நிர்வாகம் விளக்கம்...

ஆவின் க்ரீன் மேஜிக் பால் விநியோகம் குறைக்கப்படவோ நிறுத்தப்படவோ இல்லை என்றும், வழக்கம்போல் விநியோகம் செய்யப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Rohini

ஆவின் க்ரீன் மேஜிக் பால் , விநியோகத்திற்கு தடை என பரவிய தகவல்

கடந்த சில தினங்களாக ஆவின் க்ரீன் மேஜிக் பால் விநியோகம் குறைக்கப்படுவதாக மக்களிடயே தகவலானது பரவி வந்தது

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான ‘Green Magic’ பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆவில் நிறுவனம் அறிவித்துள்ளது

எந்த வகையிலும் விநியோகமானது நிறுத்தப்படவில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளது

ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும் - Green Magic பால் உட்பட - தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தடங்கலின்றி விநியோகம் தொடரும் ,ஆவின் நிறுவனம்

இஹ்டு குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஆவின் , பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆவின் Green Magic பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக பரவிய எதிரொலி , அரசியல் தலைவர்கள் கண்டனம்

சில தினங்களுக்கு முன்பு ,ஆவின் பால் உற்பத்தியை முடக்குவது, மக்கள் ஆரோக்கியத்தின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல். அதிக உற்பத்தி செலவின் காரணமாக,

பெரும்பாலான நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவினின் ‘கிரீன் மேஜிக்’ பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது என அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், ஆவின் நிர்வாகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

======================