Actor and Director Parthiban Honours Sanitation Worker Padma for Hands over 45 Sovereigns of gold Latest News in Tamil Source : Google
தமிழ்நாடு

பத்மாவின் நேர்மை செயல் : மெய்சிலிர்த்த நடிகர் பார்த்திபன்

Actor Parthiban Honours Padma : பணியின் போது கண்டெடுத்த ரூ. 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் jபத்மாவின் பாதம் தொட்டு நடிகர் பார்த்திபன் பாராட்டியிருக்கிறார்.

Rohini

யார் இந்த பத்மா?

Actor and Director Parthiban Honours Sanitation Worker Padma : திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (50). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணி செய்து வருபவர்.

குப்பையில் கிடந்த 45 சவரன்

தி.நகரில் உள்ள மகாராஜா சந்தானம் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு குப்பையோடு கிடந்த கவர் ஒன்றை எடுத்து பார்த்தபோது, ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் தங்க நகைகள் இருப்பது தெரிந்தது. இது மொத்தம் 45 சவரன் ஆகும்.

நெகிழ்ச்சி பாராட்டு

ரூ. 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கண்டெடுத்து அதனை உரியவரிடம் ஒப்படைத்து நேர்மைக்கு அடையாளமாக இவர் நமக்கு தெரிகிறார் என்றும் , தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருக்கும் இந்த நேர சூழலில் அவ்வளவு நகைகளை பார்த்தும் கூட பத்மா தடுமாறவில்லை என பார்த்திபன் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

உலக அழகி கிரீடம்

தங்க மங்கை பத்மாவை எத்திராஜ் கல்லூரிக்கு அழைத்து மேடையில் வைத்து அவருக்கு செருப்பு அணிவித்து, பாதங்களை தொட்டு வணங்கி, சேலை போர்த்தி, உலக அழகி கிரீடம் அணிவித்து மகிழ்ந்தார் பார்த்திபன் .

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பத்மாவுக்கு உலக அழகி கிரீடம் கொடுத்து, தான் பேரழகன் ஆகிவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

ட்விட் வாழ்த்தில் பெருமிதம்

தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.

வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

பத்மாவிற்கு குவிந்த பாராட்டு

தன் பணியின் போது கண்டெடுத்த ரூ. 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அவரின் இந்த நேர்மை செயல்களுக்கு பலரும் புகழ் பார்ட்டி வருகின்றனர்

நடிகர் ரஜினிகாந்த்

பத்மாவை தன் இல்லத்திற்கு அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி தங்க சங்கிலி அணிவித்தார்.

தமிழ்நாடு அரசு வாழ்த்து

பத்மாவின் நேர்மை செயலை பாராட்டி தமிழக அரசு அவருக்கு ஒரு லட்சம் ஊக்கத்தொகை அளித்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.