தவெக கரூர் சம்பவம்
TVK Vijay Letter To Election Commission : தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு இடங்களில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக தவெக பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு வந்தது, தொடர்ச்சியாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும்போது, கூட்ட நெரிசலால் 40க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது, இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் விவதாதத்திற்கு உரிய பேசுபொருளாக உருவெடுத்தது. இதனால், பல்வேறு சிக்கல்களுக்குள் உள்ளான தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் அவ்வப்போது இயல்பு நிலைக்கு திரும்பி கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
எஸ் ஐ ஆர் தீவிரம்
இந்நிலையில், தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் முறைகேடு மற்றும் வாக்கு திருட்டு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தின் வாயிலாக எஜ் ஐ ஆர் பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்வேறு கட்சிகள் ஆதரிக்கும் நிலையில், மாநில கட்சிகள் எதிர்த்தும் வருகின்றன். அதன்படி, முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக கட்சியும், இதற்கு முழு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் மற்றும் கண்டன ஆர்ப்பட்டங்களை நடத்தி வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையருக்கு விஜய் கடிதம்
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தை உட்படுத்துவதற்கான அவசர வேண்டுகோள்.
ஐயா, 1. தமிழக வெற்றி கழகம் (“TVK”) சார்பாக உங்கள் அவசரமான தலையீட்டை நாடி இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி தெளிவான மற்றும் உணர்த்தக்கூடிய வரையறைக்குட்பட்ட வருகை மற்றும் செயல்பாடுகளை நிறுவியுள்ளது.
2026 தேர்தலில் போட்டியிடுகிறோம்
மேலும், வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதற்கு எங்கள் கட்சி உறுதியாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற பார்வையின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுதல் அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பின் ஒரு அங்கமாக அமைவதாக எங்கள் மரியாதையுடன் வலியுறுத்துகிறோம்.
தவெகவுக்கு அனுமதி மறுப்பு
இந்தியத் தேர்தல் முறையில் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதாக உங்கள் அலுவலகத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது அல்லது எங்களைக் கூட்டங்களில் இருந்து நீக்கி வருகிறது.
விரிவான தொடர்பு மற்றும் பரந்தளவிலான, அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தக் கூட்டங்களில் இருந்து விலக்கப்படுவது, தேர்தல் முறையின் நியாயத் தன்மையில் பொதுமக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்த அத்தியாவசியமான சமமான பங்கேற்பு என்ற கோட்பாட்டை பாதிக்கிறது.
மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகம் தேர்தல் தயாரிப்பு செயல்முறைகளைக் குறித்துக் கூட்டங்களை நடத்தியபோது, அவற்றில் TVK சேர்க்கப்படாதது, தேர்தல் செயல்முறைகளின் கண்காணிப்பில் ஒரு முக்கியமான வாக்காளர் பகுதியை பங்கேற்பிலிருந்து விலக்குகின்ற விளைவுகளை உருவாக்குகிறது என்பதை மேலும் சமர்ப்பிக்கிறோம்.
தவெக தரைநிலை கருத்துக்களை தர ஆயத்தமாக உள்ளது
மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறைகளின் உயர்ந்த தரத்தைக் காக்கும் நோக்கத்தில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் TVK-க்கு தக்க அறிவிப்பு வழங்கி, அவற்றில் பங்கேற்க அழைக்க வேண்டுமென மிகுந்த தாழ்மையுடன் கோருகிறோம்.
தேர்தல் கூட்டங்களுக்கு அழைப்பு அவசியம்
அடுத்தடுத்த தேர்தல் தயாரிப்புகளுக்கான செயல்பாடுகளில், சுதந்திரமான, நியாயமான மற்றும் பிரதிநிதித்துவமான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும் ஆணையத்தின் முயற்சிகளில், எங்கள் கட்சி முழுமையான ஒத்துழைப்பு, ஆழமான காண்டல்கள் மற்றும் தரைநிலை கருத்துகளை வழங்கத் தயாராக உள்ளது.
தவெக கட்சி கூட்டங்களில் பங்கேற்பைு உறுதி செய்யும்
எனவே, இந்த தேர்தல் முறையை மேம்படுத்தும் பொது நோக்கில் எவருக்கும் பாதகமில்லாத இந்த நியாயமான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும்படி, இந்திய அரசியல் சட்டத்தின் 324ஆம் கட்டளையின் கீழுள்ள உங்களது மேற்பார்வை அதிகாரத்தின் படி, தமிழக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிற்கும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு, அல்லது எங்களது மனுவை அவர்களிடம் கொண்டுசெல்லுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களில் TVK முறையாக சேர்க்கப்படுவதை இது உறுதி செய்யும் என்று கேட்டுகொண்டார்.
===