actor Dhanush fans unveiling flag for fan club, speculation has arisen as he is also entering politics AI generated
தமிழ்நாடு

”நற்பணி மன்ற கொடி” தனுஷ் ரசிகர்கள் அறிமுகம் : “எண்ணம் போல் வாழ்க்கை”, அரசியலில் தடம் பதிப்பா?

ரசிகர் மன்றத்துக்கான கொடியை நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில், அவரும் அரசியலில் கால்பதிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Kannan

தமிழக அரசியலில் நடிகர்கள்

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து இருந்தாலும் பெரிதாக சாதிக்கவில்லை. பெயரளவில் கட்சி அல்லது ஏற்கனவே உள்ள கட்சியில் ஐக்கியம் என்ற அளவில் தான் இருக்கிறது.

சாதித்து காட்டிய விஜய்

ஆனால், இதை எல்லாம் உடைத்து காட்டியவர் நடிகர் விஜய். கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகள், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல், 108 இடங்களில் வெற்றி, தவெக ஆட்சி, முதல்வராக விஜய் என அவரது எழுச்சி இந்திய அரசியலை புரட்டி போட்டு இருக்கிறது.

ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி

தமிழகம் என்றால் அதிமுக, திமுக என மாயை உடைத்து எறிந்து இருக்கிறார். தமிழக ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் 59 ஆண்டுகால ஏக்கத்தை போக்கி இருக்கிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என்ற திராவிட கட்சிகளின் பிடிவாத போக்கை உடைத்து கூட்டணி ஆட்சி அமைத்து சாதித்து இருக்கிறார் விஜய்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்

பெண்கள், சிறுபான்மை வாக்குகளே திமுகவின் பெரிய வலிமையாக இருந்த நிலையில், அதையும் தவெக உடைந்து சுக்கு நூறாக்கி இருக்கிறது. இதன்மூலம், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். காலமும் நேரமும் கூடி வந்தால், அதிகாரத்தை பிடிப்பது என்று தவெக உணர்த்து இருக்கிறது.

தனுஷ் ரசிகர் மன்றக்கொடி

இந்தநிலையில், நடிகர் தனுஷின் ரசிகர்கள் தங்களது ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தி வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

24 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில்...

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான தனுஷ், 24 ஆண்டுகளையும் கடந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சி வருகிறார்.

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் அவர் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.

அரசியல் பேசாத தனுஷ்

தனது திரைப்படங்களின் வெற்றி விழாவில் எப்போதும் அரசியல் ரீதியாக தனுஷ் பேசுவதில்லை. அரசியல் ரீதியாக எந்த கட்சியுடனும் நெருக்கம் காட்டியதும் இல்லை. பாடகர், பாடலாசிரியர், இயக்குனராக சினிமாவில் முத்திரை பதித்து வருகிறார்.

நடிகர்களின் நற்பணி மன்றங்கள்

நீண்ட காலமாக தமிழ் சினிமாவின் ரசிகர்கள் தங்களது நடிகர்களின் பெயரில் ரசிகர் மன்றங்களை முதலில் ஆரம்பிப்பதும் , பிற்காலங்களில் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றமாக மாறுவதும் இயல்பான ஒரு விஷயம் தான். ல் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அண்மையில் நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதாக அவரது ரசிகர் கூறிய நிலையில் பின்னர் அது மறுக்கப்பட்டது.

நற்பணி மன்றம் கொடி அறிமுகம்

இந்நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் இணைந்து புதிய ரசிகர் நற்பணி மன்ற கொடியினை அறிமுகப்படுத்தினர். x தளத்தில் இந்த செய்தி அதிவேகமாக பரவியது. அதை தொடர்ந்து பலரும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?

தனுஷ் விரைவில் அரசியலில் இறங்க உள்ளாரா? என்பது போன்ற கருத்துக்கள் பரவ தொடங்கின. விஜய் தேர்தல் அரசியல் தொடர்பாக சர்க்கார் திரைப்படத்தில் நடித்த பின்னர் அரசியலில் களம் இறங்கினார் . தனுஷும் கொடி என்ற அரசியல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

"எண்ணம் போல் வாழ்க்கை"

தனுஷ் ரசிகர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் , அதன் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்டு கொடியினை வடிவமைத்துள்ளனர். நட்சத்திரம் நடுவில் தனுஷ் கும்பிடுவதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேல் "எண்ணம் போல் வாழ்க்கை" என்று தனுஷின் பிரபலமான வசனம் இடம்பெற்றுள்ளது.

கொடி அறிமுகம் குறித்து தனுஷ் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படா விட்டாலும், அவர் அரசியலில் தடம் பதிக்கிறாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பகிரக்கப்பட்டு வருகிறது.

===============================