தமிழக அரசியலில் விஜய்
திராவிட அரசியல்ல ஊறிப்போன தமிழகத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலா, திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சி செஞ்சன. ஆனா, அரசியல் களம் 2 ஆண்டுகளுக்கு முன்னாடி, கண்ணுக்கே தெரியாம ஒரு மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கிச்சு. இதை எந்த அரசியல் கட்சியாலும், முன்பே ஊகிக்க முடியல,
முதல் தேர்தல், முதல் வெற்றி, நேரடியாக ஆட்சி
இதனாலதான், பலமான கட்டமைப்பு இருக்கிறத திமுக, அதிமுகவும் தேர்தலில் தோல்விய சந்திக்க வேண்டியதா போச்சு. 2024ம் ஆண்டு பிப்ரவரி 02ம் தேதி, தமிழகத்துல அரசியல் மாற்றத்துக்கான விதை போடப்பட்டது. ஆமா, 'தமிழக வெற்றிக் கழகம்' பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், இரண்டு மாநாடுகள நடத்தி தனது பவர காட்டினாரு.
அவருக்கு கூடிய கூட்டம் அழைத்து வரப்பட்டது கிடையாது, தானா சேர்ந்த கூட்டம். 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையா போட்டி போட்டது தவெக, விஜய்யும் முதல் முறையா தேர்தல சந்திச்சாரு.
விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி
இந்தியாவே எதிர்பார்க்காத விதமா, முதல் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றியது தவெக. விஜய்யின் முதல் வெற்றி அவரை முதல்வர் அரியாசணத்துல அமர வச்சது. தமிழகத்துல கூட்டணி ஆட்சிய கொண்டு வந்த விஜய், 6 மாதங்களா மாநிலத்தை வழி நடத்திக்கிட்டு வர்றாரு.
அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்கள்
விஜய்யோட அரசியல் பிரவேசம் பல நடிகர்களை அதை நோக்கி திரும்பி பார்க்க வச்சு இருக்கு. எனவே, முன்னணி நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற சிலர், தங்கள் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைப்பது, ரசிகர்களை சந்திப்பது, ரசிகர் மன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவது என, தங்களோட இலக்கை அரசியல் பக்கம் திருப்பி இருக்காங்க.
தனுஷ் ரசிகர் மன்றம்
குறிப்பா, நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற செயல்பாடுகளும், மக்கள் நலப்பணிகளும் கவனம் ஈர்த்து வருது. சமீபத்தில், திருவள்ளூரில் தனியார் கல்லூரி ஒன்றில், 'அகில இந்திய தனுஷ் நற்பணி மன்றம்' சார்பில் நடைபெற்ற அவருடைய பிறந்தநாள் விழாவில், தனுஷ் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாரு. இது அவருடைய அரசியல் வருகை குறித்த விவாதத்துக்கு வலுச் சேர்த்தது.
அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?
தனுஷின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றங்கள் அனைத்தும், தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், விஜய் வழியை பின்பற்றி தனுஷும் தனது நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தி அதன் மூலம் அரசியலில் களம் காணப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
டெல்லியில் ஆலோசனை நடத்திய தனுஷ்
கடந்த வாரம் சில நாட்கள் டெல்லியில் தங்கி இருந்த தனுஷ், தேர்தல் வியூக நிபுணர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலரையும் சந்திச்சு, அடுத்தகட்ட அரசியல் முன்னெடுப்புகள் பற்றி விவாதிச்சதா சொல்லப்படுது.
மகளிர் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு
இதற்கிடையே, 'தமிழக எழுச்சி கழகம்' என்ற பெயரில் தனுஷ் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவை எல்லாத்துக்கும் வலு சேர்க்கிற விதமா, சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணியினரை சந்திச்சாரு தனுஷ்.
3 ஆயிரம் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் வர வழைக்கப்பட்டாங்க. காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுவதா சொல்லப்பட்டாலும், பிற்பகல் 3 மணிக்கு தான் தனுஷ் வந்தாரு.
வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு பரிசு
நிகழ்ச்சியில் கலந்து கிட்ட 3 ஆயிரம் பெண் ரசிகர்களுக்கும் தீபாவளி பரிசாக வெள்ளி காமாட்சி விளக்கை கொடுத்தாரு தனுஷ். அவங்க மத்தியில அவர் எதுவும் பேசவில்லை. ஆனா, மகளிர் அணி நிர்வாகிகளுக்கு குத்து விளக்கை பரிசாக கொடுத்த போது, "பெண் ரசிகர்களாகிய நீங்கள் நல்லா படிக்கணும். உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்க.
பெண்களுக்கு தனுஷ் அட்வைஸ்
பெண்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். பெண்கள் படிப்பில் மட்டுமின்றி கலைத் துறைகளிலும் சாதிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் தவறான செய்திகளை நம்பாதீங்க. நல்லதே நடக்கும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்" என தனுஷ் வாழ்த்தியதா பெண்கள் சொல்லி இருக்காங்க.
அனைவரோட தனுஷ் புகைப்படமும் எடுத்துக் கிட்டாராம். அதுமட்டுமில்லாம கூட்டத்துல 'எத்தனை சாமி வந்ததய்யா' என்ற பாடலை பாடி அசத்தி இருக்காரு தனுஷ்.
மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர். அவர்களுக்குச் சிக்கன் பிரியாணி, முட்டை, பிரெட் அல்வா எனப் பிரம்மாண்ட விருந்தும் வழங்கி அசத்தப்பட்டது.
’எங்கள் தலைவரே’ - தனுஷ்
தனுஷ் தனது நிர்வாகிகளை சந்தித்த கல்லூரி வளாகம் முழுவதும் கட் அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில, ‘பெண்களின் குரல் உயர்ந்தால்தான் சமூகத்தின் எதிர்காலமும் உயரும்’, ‘எங்கள் அன்பின் அண்ணன் தனுஷ், எங்கள் தலைவரே’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
விஜய் பாணியில வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கிட்டாரு தனுஷ்.
குத்து விளக்கில் தாமரை சின்னம்
மகளிர் அணி நிர்வாகிகளுக்கு தனுஷ் கொடுத்த குத்து விளக்கும் பேசு பொருளாகி இருக்கு. இதுல பாஜகவின் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கு.
தாமரை சின்னம், வெள்ளி நகையின் தர மதிப்பீட்டுக்கான முத்திரை அப்படின்னும் சொல்லப்படுது.
தனுஷை இயக்குவது பாஜகவா?
உண்மையில் பாஜகவின் ஆசியோடு தான் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? அவரோட வியூகம் எப்படி இருக்கும்? தவெகவை எதிர்த்து அரசியல் பண்ண முடியுமா? என்ற விவாதங்கள் அரசியல் களத்தில எழுந்து இருக்கு.
தனுஷ் அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டு இருக்கிறாரா? அல்லது தன்னோட நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளை மட்டும் விரிவுபடுத்துகிறாரா? என்ற சந்தேகமும் முன்வைக்கபடுது.
===================