சரமாரியாக விமர்சித்த விஜய் :
Actor Kamal Haasan on TVK Vijay 2nd Manadu : தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநில மாநாட்டில் பேசிய விஜய், திமுக, பாஜக மட்டுமல்ல அதிமுகவையும் விமர்சித்தார். 35 நிமிடங்கள் உரையாற்றிய அவர், கொள்கை எதிரியாக பாஜகவையும் அரசியல் எதிரியாக திமுகவையும் தவெக பார்ப்பதாக குறிப்பிட்டார். இந்த முறை அதிமுகவையும் விமர்சித்தார் விஜய்.
ரஜினி,கமலை வம்புக்கிழுத்த விஜய் :
இது மட்டுமல்லாமல் போகிற போக்கில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரையும் விஜய் விமர்சித்தார். ‘அவர் வருவாருன்னு சொன்னாங்க வரல, அவரே வராத போது இவர் எப்படி வருவாரு என்று பேசினர்’ என்று ரஜினிகாந்தை பேர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.
சினிமாவில் மார்க்கெட் போனதற்கு பின்னர் ரிட்டயர்டு ஆகும் நிலையில் நான் அரசியலுக்கு வரவில்லை. மிகப்பெரிய படை பலத்துடன் வந்திருக்கிறேன் என்று கமல்ஹாசனையும் அவர் மறைமுகமாக விமர்சித்தார்.
கேள்வியும், பதிலும் :
டெல்லியில் இருந்து சென்னை வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் நடிகர் விஜயின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மார்க்கெட் போன பின்னர் ரிட்டையர்டு ஆன பின்னர் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்றனர்.
அட்ரஸ் இல்லாத கடிதம்! :
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், “இது பற்றி கருத்து சொல்வது என்றால், எனது பெயரை அவர் எங்கேயும் குறிப்பிட்டிருக்கிறாரா அல்லது வேறு யாருடைய பெயரையாவது சொன்னாரா? அப்படி இருக்கும்போது எப்படி கருத்து தெரிவிக்க முடியும்? அட்ரஸ் இல்லாத கடிதத்திற்கு எப்படி பதில் எழுத முடியும்” என்று கேள்வி எழுப்பினார். மேலும் விஜய்(Kamal Haasan on TVK Vijay) தன்னுடைய தம்பி என்றும் அவர் தெரிவித்தார்.
=====