தமிழ்நாடு

நடிகர் கிருஷ்ணா கைது : போதைப்பொருள் வழக்கில் அதிரடி

நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kannan

அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் மதுபான விடுதி தகராறு காரணமாக அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் பழக்கம் இருந்ததும், அதனை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

சினிமா தயாரிப்பாளரான பிரசாத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்.

பிரசாத் செல்போனை ஆய்வு செய்த போது, ஜிபே மூலமாக ரூ.4.72 லட்சத்தை ஸ்ரீகாந்து, பரிமாற்றம் செய்து போதைப்பொருளை வாங்கியது அம்பலத்துக்கு வந்தது.

விசாரணைக்கு பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளளார்.

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் இன்னும் சில நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

அதனடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்து, அவருக்கு சம்மன் கொடுத்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான அவரிடம், 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி, கிருஷ்ணாவின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்ப்டது.

22 மணிநேர தொடர் விசாரணைக்கு பிறகு நடிகர் கிருஷ்ணாவை காவல்துறையின் கைது செய்தனர்.

கேரளாவில் இருந்து போதைப்பொருளை வாங்கி வந்து விற்பனை செய்ததாக கவின் என்பவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கிருஷ்ணாவிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

====