Rajinikanth Speech About TVK Vijay at Velpari Success Celebration Event  
தமிழ்நாடு

அனுபவசாலி இல்லாவிட்டால் கட்சி? : விஜய்க்கு ரஜினிகாந்த் அட்வைஸ்

Rajinikanth Speech About Vijay at Velpari Event : அனுபவசாலிகள் தூண் போன்றவர்கள், அவர்கள் இல்லா விட்டால் கட்சிகள் வெற்றிபெறாது என்று, தவெக தலைவர் விஜயை நடிகர் ரஜினிகாந்த், மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Kannan

வேள்பாரி நாவல் பாராட்டு விழா :

Rajinikanth Speech About Vijay at Velpari Event : மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவல்(Velpari Novel) ஒரு லட்சம் பிரதியை கடந்து விற்பனையாகிறது. இதையொட்டி, சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், சில மாதங்களுக்கு முன்பு

திமுக சார்பில் நடைபெற்ற விழாவில், பழைய நண்பர்கள் குறித்து தாம் கூறிய கதை விவாதத்துக்கு வழிவகுத்ததை சுட்டிக் காட்டினார்.

விஜய்க்கு ரஜினிகாந்த் அட்வைஸ் :

அனுபவசாலிகள் இல்லா விட்டால் ஒரு கட்சி வெற்றி இலக்கை எட்ட முடியாது, வெற்றி இலக்கை எட்டுவதும் கடினம் தான் என, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு(TVK Vijay) மறைமுகமாக ஆலோசனை வழங்கினார்.

சொல்ல மறந்ததால் வந்த வினை :

பழைய நண்பர்கள் தூண்கள், சிகரத்தை போன்றவர்கள் என கூற நினைத்தேன். ஆனால் கூட்டத்தில் கரவொலி எழும்பியதால் அதை சொல்ல மறந்து விட்டேன். வேள்பாரி நிகழ்ச்சிக்கு(Velpari Event) வரலாறு தெரிந்த நடிகர் சிவகுமார், கமலஹாசன் ஆகியோரை அழைத்திருக்கலாம். ஆனால் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு தள்ளாடி நடந்து வரும் என்னை அழைத்து இருக்கின்றனர்.

சிவக்குமார், கமலுக்கு பாராட்டு :

சிவகுமார் மகாபாரதம் குறித்து 6 மணி நேரம் தொடர்ச்சியாக பேசக்கூடியவர். திருக்குறள் குறித்தும் உரையாற்ற கூடியவர். நடிகர் கமலஹாசன் மிகப்பெரிய அறிவாளி. நிறைய புத்தகங்கள் படித்தவர். அவரை போன்றவர்கள் விழாவுக்கு வந்திருக்கலாம் என ரஜினிகாந்த்(Rajinikanth) பேசினார்.

ஜெயகாந்தன் எழுதிய நூல்களை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த் "அவர் எழுதிய யாருக்காக அழுதான் என்ற புத்தகத்தை படித்து மூன்று நிமிடங்கள் அழுதேன்" எனக் குறிப்பிட்டார்.

கலையை ஆதரிக்கும் தமிழர்கள் :

சிறந்த பேச்சாளரான அண்ணா தேர்தலில் தோற்றிருக்கிறார். ஆனால், கலைஞர் தேர்தலில் வென்றார். இதற்கு பராசக்தி, மனோகரா போன்ற படங்களே காரணம். மனோகரா, மந்திரகுமாரி, பராசக்தி படங்கள் ஏற்படுத்திய தாக்கமே கலைஞர் வெல்ல காரணம். எந்த வேறுபாடும் பாகுபாடும் இல்லாமல் கலையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என ரஜினிகாந்த்(Rajinikanth) பேசினார்.

====