கட்சிகளை அதிரவைத்த விஜய் :
Actor Sarathkumar Reaction on TVK Vijay 2nd Manadu : மதுரை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளை சரமாரியாக விளாசித் தள்ளினார் நடிகர் விஜய். ரஜினி, கமலையும் விட்டு வைக்காமல் அவர்களையும் மறைமுகமாக பேசி வம்புக்கு இழுத்தார். பாஜக, அதிமுகவை விமர்சித்து அவர் பேசியது காட்டமாக இருந்தது.
பாஜக, அதிமுக - விஜய் பேச்சு :
பாஜகவுடன் நாம் ஏன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைக்க வேண்டும்?. நாம் என்ன ஊழல் கட்சியா என்று மறைமுகமாக அதிமுகவையும் வம்புக்கிழுத்தார் விஜய். ஆர்எஸ்எஸ் குறித்தும் பேசிய விஜய், மதச்சார்பற்ற கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி என்றும் குறிப்பிட்டார்.
அரசியலில் விஜய் வளரவில்லை :
இந்தநிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், ” மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று கூறும் அளவுக்கு, நடிகர் விஜய் இன்னும் அரசியலில் வளரவில்லை, என்று தெரிவித்தார்.
பேச்சில் கவனம் தேவை :
யாரை பற்றி பேசுகிறோம், எதைப் பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்பதை உணர்ந்து விஜய் கவனமுடன் பேச வேண்டும். விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருப்பதே நல்ல அரசியலுக்கு அழகு” என்று சரத்குமார் கூறினார்.
தமிழக அரசியலில் பரபரப்பு :
மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு(TVK Vijay 2nd Madurai Manadu), தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் கூட்டணி கணக்கும், அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
====