தமிழ்நாடு

தவறு செய்து விட்டேன், ஜாமீன் கொடுங்க : கண்ணீருடன் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் தவறு செய்து விட்டதாகவும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கண்ணீருடன் நடிகர் ஸ்ரீகாந்த் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Kannan

அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

அவருடைய செல்போனை பறிமுதல் செய்து காவல் துறையினர் ஆய்வு செய்த போது, போதைப் பொருளை விநியோகம் செய்யும் பிரதீப் என்பவருடம் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருளை வாங்கிச் சென்று பிரசாத் விற்பனை செய்தது அம்பலமானது.

பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்தை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தியதோடு, அவரை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதில், ஸ்ரீகாந்த் போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் 40 முறை போதை பொருளை வாங்கியதாகவும் இதற்காக ரூ 4.72 லட்சத்தை பிரதீப்புக்கு ஜிபேயில் செலுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இந்தநிலையில், போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், ஸ்ரீகாந்த் தரப்பில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது.

தவறு செய்துவிட்டேன், உடல்நிலை சரியில்லாத மகனை கவனித்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. நான் கண்டிப்பாக அவர்களுடன் இருந்தாக வேண்டும் என ஸ்ரீகாந்த் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஸ்ரீகாந்த்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

=====