Actor Srinivasan, a personality of Malayalam cinema who made audiences laugh and think, has passed away. He was 69 Google
தமிழ்நாடு

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் : 48 ஆண்டுகளில், 200 படங்கள்

Actor Sreenivasan Passes Away at Age 69 : ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மலையாள திரையுலகின் ஆளுமை ஸ்ரீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 69.

Kannan

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன்

Actor Sreenivasan Passes Away at Age 69 : சாமானிய மக்களின் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கொடுப்பதில் ஸ்ரீனிவாசனுக்கு தனித்திறமை இருந்தது. காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, டிபி கோபாலன் எம்.ஏ, சந்தேசம், நோக்கியந்திரம், தலையணை மந்திரம் போன்ற படங்களை மலையாளிகளால் மறக்க முடியாது. ஐந்து முறை கேரள அரசின் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட ஸ்ரீனிவாசன்

ஸ்ரீனிவாசன் எழுதி, இயக்கி, நடித்த சிந்தாவிஷ்டயாய ஷியாமளா, நோக்கியந்திரம் ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன.

நடிகரும், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பதித்தவர் ஸ்ரீனிவாசன் (69).

ஸ்ரீனிவாசனும் கேரளாவும்

1956 ஏப்ரல் 4 அன்று தலச்சேரிக்கு அருகிலுள்ள பாட்யத்தில் பிறந்தார் ஸ்ரீனிவாசம். கதிரூர் அரசுப் பள்ளியிலும், பழசிராஜா என்.எஸ்.எஸ் கல்லூரியிலும் படித்தார். பின்னர் மெட்ராஸில் உள்ள ஃபிலிம் சேம்பர் இன்ஸ்டிடியூட்டில் திரைப்பட நடிப்பில் டிப்ளமோ பெற்றார்.

1977-ல் பி.ஏ. பக்கர் இயக்கிய 'மணிமுழக்கம்' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 1984-ல் 'ஓடருதம்மாவா ஆளறியாம்' படத்திற்கு கதை எழுதினார். நோக்கியந்திரம், சிந்தாவிஷ்டயாய ஷியாமளா போன்ற ஸ்ரீனிவாசன் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மலையாள மக்களை சிரிக்கவும், சிந்தக்கவும் வைத்ததில் வல்லவர் ஸ்ரீனிவாசன்.

சிறந்த திரைக்கதை ஆசிரியர்

சன்மனசுள்ளவர்க்கு சமாதானம், டி.பி.பாலகோபாலன் எம்.ஏ, காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, தலையணை மந்திரம், கோளாந்தர வார்த்த, சம்பக்குளம் தச்சன், வரவேற்பு, சந்தேசம், அழகிய ராவணன், ஒரு மறவத்தூர் கனவு, கதை சொல்லும்போது போன்ற பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 2018-ல் வெளியான 'ஞான் பிரகாஷன்' தான் ஸ்ரீனிவாசன் கடைசியாக திரைக்கதை எழுதிய படம்.

தமிழிலும் நடித்து இருக்கிறார்

ஸ்ரீனிவாசன் தமிழில் லேசா லேசா, புள்ளகுட்டிக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பெயர் விமலா. வினீத் ஸ்ரீனிவாசன், தியான் ஸ்ரீனிவாசன் என இரு மகன்கள் உள்ளனர்.

48 ஆண்டு சினிமா பயணம் நிறைவு

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந் அவர், . இன்று காலை டயாலிசிஸ் செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு உடல்நிலை மோசமடைந்து உயிர் பிரிந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசனின், 48 ஆண்டு கால சினிமா வாழ்க்கை இன்றுடன் நிறைவு பெற்று இருக்கிறது.

மலையாள திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல இயக்குநர் வினித் சீனிவாசன் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமையின் மறு உருவம் ஸ்ரீனிவாசன்

பெரும்பாலும் இவர் நடித்த படங்களில் அவரது கேரக்டர் சாதாரண மனிதனை போல் தோற்றம் அளிக்கும். இதுதான் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. மலையாள உலகில் எளிமை என்ற சொல் உச்சரிக்கப்படும் போது எல்லாம் ஸ்ரீனிவாசன் நினைவு அனைவருக்கும் தெரியும்.

=====