Actor Vijay Deverakonda's Kingdom Movie Controversy Issue 
தமிழ்நாடு

ஈழத் தமிழர் விவகாரம்: மன்னிப்பு கேட்ட ’கிங்டம்’ தயாரிப்பு நிறுவனம்

Kingdom Movie Controversy Issue : தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம் என ‘கிங்டம்' பட நிறுவனம் வருத்தம் தெரிவித்து இருக்கிறது.

Kannan

தேவரகொண்டா நடிப்பில் ’கிங்டம்’ :

Kingdom Movie Controversy Issue : பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின்(Vijay Deverakonda) நடிப்பில் ஜூலை 31ம் தேதி ‘கிங்டம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழகத்தில் சுமாரான வரவேற்பு கிடைத்த நிலையில், சர்ச்சை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது.

ஈழத் தமிழர்கள் அவமதிப்பா? :

அது என்னவென்றால், ஈழத்தமிழர்களை இழிவாக சித்தரிக்கும் வகையில் படம் இருப்பதாக புகார்கள் எழுந்தது.பலரும் சமூக வலைதள பக்கங்களில் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள். கிங்டம் திரைப்படத்தினை திரையிடக் கூடாது மீறினால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(Seeman on Kingdom Movie) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சில இடங்களில் கிங்டம் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

மன்னிப்பு கோரிய தயாரிப்பு நிறுவனம் :

இதனையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்(Sitara Entertainments), அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

”எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் “கிங்டம். இப்படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கேள்விப்பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.

மேலும் படிக்க : ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்தமாட்டேன் : அஜித் உறுதி

கதை கற்பனையானது, யாரையும் குறிப்பிடவில்லை :

இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில்(Disclaimer Portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ’கிங்டம்’ திரைப்படத்திற்கு(Kingdom Movie Makers) ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

====