சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
Actor Vishal Case Update in Tamil : லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் தருமாறு , விஷால் தரப்பிடம் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதிகள் அமர்வு
உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தரப்பு மேல்முறையிட்டிருந்த மனுவை விசாரணை செய்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது, 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால்(Vishal Lyca case details in Tamil) தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
விஷால் தரப்பு தாக்கல்
நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கு , 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய ஆறு வார கால அவகாசம் வழங்கக் கோரி விஷால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
6 வார கால அவகாசம் வேண்டும்
நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம், தங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், பணத்தை திரட்ட அவகாசம் தேவைப்படுவதாகவும் , 10 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்கு 6 வார கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மனு தள்ளுபடி
அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்து எட்டு வாரங்கள் கடந்து விட்டதால், இதனை ஏற்க முடியாது எனவும் ,அதற்கு அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.