https://www.facebook.com/login/web/?cuid=AYg877oZD_huGpqoVlIsDSyCfDWX3QYzLc-JAh3YVgs4jpxg9m1h1-FSQhohiyYxgl-8xKj7RPYB8eI03E0X-FJTwAev0cCodHWg---23Bt6Xg&e=1348092
தமிழ்நாடு

சிறுவன் கடத்தல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : சஸ்பெண்ட் தொடரும்

ஏடிஜிபி ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Kannan

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், உடந்தையாக செயல்பட்டதாக ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், உச்சநீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் ஏடிஜிபி மீதான சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெற முடியுமா? அல்லது தொடருமா? என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏடிஜிபி சஸ்பெண்ட் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’ஏடிஜிபி ஜெயராம் மீதான பணியிடை நீக்கத்தை திரும்பப் பெறப்போவதில்லை.

வழக்கு விசாரணை நடைபெறுவதால், இந்த நடவடிக்கை தொடர வேண்டும்.

வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதால், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது’ என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வேறு அமைப்புக்கு மாற்ற முடியுமா எனக் கேட்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜெயராம் மீதான கைது உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

===