Edappadi Palanisamy Reaction on Sengottaiyan Join TVK : சென்னை, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி கலவரம் தொடரந்தது. இதனால்,தொடர்ந்து பல்வேறு நிலவரங்கள் வெளிவந்து நான் இருக்கிறேன் உங்களுக்கு ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.
மூவரும் கட்சியில் இருந்து வெளியேற்றம்
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த பிறகு, உள்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார்.
கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே, தினகரன் அதிமுகவில் இல்லாத நிலையில், சசிகலாவும் வெளியேற்றப்பட்டார்.
செங்கோட்டையன் அதிருப்தி
பல்வேறு இன்னல்களுக்கு இடையில் செங்கோட்டையன் கட்சியில் இருந்து வந்தாார். இதைத்தொடர்ந்து ஈரோட்டில் கட்சிப் பதவியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை நியமித்தார்.
இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளான கே.ஏ.செங்கோட்டையன், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சில வார்த்தைகளை வெளியிட்டார்.
தவெகவில் செங்கோட்டையன்
இதனால், கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் விதித்ததால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், தொடர்ந்து மவுனம் காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு விஜய் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றார். இவரைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
எடப்பாடியின் பதில்
அதற்கு முன்னதாக நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் செங்கோட்டையன் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை. அதனால் பதில் சொல்ல அவசியம் இல்லை, செங்கோட்டையன் குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.. அவரை கேளுங்கள் என்று கூறினார்.