ADMK Chief Edappadi Palanisamy Tweet on Bihar Assembly Election Results 2025 Google
தமிழ்நாடு

பீகார் தேர்தல் முடிவு 2025: வெற்றி குறித்து டுவீட் செய்த எடப்பாடி!

Edappadi Palanisamy on Bihar Assembly Election Results 2025 : பிகார் தேர்தலின், வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில், இந்த வெற்றி குறித்து எடப்பாடி பழனிசாமி டுவீட் செய்துள்ளார்.

Bala Murugan

பீகார் தேர்தல்

Edappadi Palanisamy on Bihar Assembly Election Results 2025 : பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே அறிவித்தபடி, நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்றபடி, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

மாலைக்குள் முடிவுகள்

முடிவுகள் மாலை 4 அல்லது 5 மணிக்கு மேல் தெரிய வரவிருக்கும் நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வாக்கு நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னிலை, வெற்றிக்கான அறிகுறி என தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் பட்டாசுடன் கொண்டாடி வருகிறார்கள்.

தேர்தல் முடிவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்

பெரும் எதிர்பார்ப்புகளுடன்,தொடங்கிய பீகார் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என சில கருத்து கணிப்புகள் முன்கூட்டியே வெளிவந்தாலும், தேர்தல் ஆணையத்தின்படி தேர்தல் முடிவுகளுக்கு, பீகார் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அதன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் காத்திருக்கின்றனர். அதேசமயம், டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பீகார் தேர்தல் முடிவுக்கு, சம்மந்தமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு

அதன்படி, அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி பழனிசாமி பிகார் தேர்தல் முடிவு குறித்து டுவீட் செய்துள்ளார்.

அதில் பிகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பிகார் மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பக என மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி என ஆரம்பமாகி, அமித்ஷா, நிதிஷ்குமார் என தொடர்ந்து தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், கூட்டணியின் கூட்டுத் தலைமை மற்றும் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த ஆணை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிகாரின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும்

இந்த வலுவான ஆணை பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்புவாதக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமியின் இந்த பதிவிற்கு சமூக ஆர்வலர்கள் முதல், அரசியல் கட்சி தலைவர்கள் வரை தங்களது ஏற்புடைய மற்றும் முரண்பட்ட கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர்.

======