தேவர் ஜெயந்தி சந்திப்பு
Edappadi Palaniswami Removes KA Sengottaiyan from AIADMK : ஆண்டுதோறும் அக்டோபர் 30 ஆம் தேதி தேசத் தலைவர் உ.முத்துராமலிங்க தேவர் நினைவு தினம் அனுசரிக்கப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும், மரியாதை செலுத்தவர். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தியால் ஒற்றுமை
இந்நிலையில், ராமநாதபுரம் பசும்பொன்னுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரே காரில் வந்தனர். இது பெரும் பேசுபொருளாக ஆனநிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அங்கு வந்த அவர்களுடன் அமமுக கட்சி தலைவரான டிடிவி தினகரன் என மூவரும் ஒன்றினைந்து தேவரரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனால், அரசியல் வட்டாரங்கள் பெரும் சலசலப்பிற்கு உள்ளானது.
எடப்பாடி பழனிசாமி கருத்து
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கட்சியை விட்டு நீக்கினால் நல்லது தான் என்று பதிலளித்தார், இதுமாபெரும் சர்ச்சைக்குளானதை அடுத்து, இவரின் தரப்பு குறித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி வரம்புகளை மீறுவோருக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்றும் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
அதிமுக அறிக்கை
அதன்படி, அதிமுக செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியுள்ளதை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.அதில்,அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பும் வைத்துக்கொண்டது உள்ளிட்ட காரணங்களால் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அறிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனிடம் கேள்வி
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கோள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து செங்கோட்டையன் என்னை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து நாளை விரிவாக விளக்கம் அளிக்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.