Edappadi Palaniswami submits petition to the Governor regarding the Rs. 4 lakh crore corruption by the DMK! google
தமிழ்நாடு

4 லட்சம் கோடி ஊழல் செய்த திமுக: ஆளுநரிடம் மனு அளித்த எடப்பாடி!

Edappadi Palaniswami RN Ravi Meet : திமுக அரசு இதுவரை 4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது தமிழகத்தை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளி உள்ளது என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Baala Murugan

ஆளுநரிடம் மனு - விசாரணை கமிஷன் தேவை

Edappadi Palaniswami RN Ravi Meet To Submits Petition to Governor : தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது எனவும் இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.

அதிமுக தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்த எடப்பாடி

ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழு இன்று சென்னை லோக்பவனில் சந்தித்தது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் ஆளுநர் ரவியை சந்தித்தனர்.

ஊழல் புகார் பட்டியல்

பின்னர், திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்., கவர்னரிடம் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி 2021ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து பட்டியலை வழங்கியுள்ளோம் எனவும் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க கவர்னரை வலியுறுத்தியுள்ளோம்.

கோடிக் கணக்கில் கொள்ளை

திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழகத்தை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளி உள்ளது. இதனைப் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டுகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக ஊழலை பட்டியலிட்ட எடப்பாடி

மேலும், ரூ.4 லட்சம் கோடி ஊழல் என்று கூறிய எடப்படி பழனிசாமி உயர் கல்வித்துறையில் 1,500 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாகத்தில் 64,000 கோடி ரூபாய், பத்திரப்பதிவு துறையில் 20 ஆயிரம் கோடி ரூபாய், சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய், ஹிந்து சமய அறநிலையத் துறையில்1,000 கோடி ரூபாய், டாஸ்மாக்கில் 50 ஆயிரம் கோடி ரூபாய், நீர்வளத்துறையில் 17 ஆயிரம் கோடி ரூபாய், எரிசக்தி துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. மொத்தமாக ஆட்சி பொறுப்புக்கு வந்த 4.5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார்.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை

திமுக அரசின் ஊழல்களுக்கு முழுமையான ஆதாரம் இருப்பதால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை

ஊழல் செய்வதை தவிர திமுக தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தினை வரவேற்கிறோம். காரணம், அது அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்றும் மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது திமுக அரசு வழங்குகிறது.

பொங்கல் பரிசு தொகையை 3 ஆயிரம் ரூபாய் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கிட்னி திருட்டு குறித்து அறிக்கை அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

======================