ADMK Chief Edappadi Palaniswami warned that action will be taken against anyone betrays AIADMK on Sengottaiyan Image Courtesy : ADMK Chief Edappadi Palaniswami Public Meet
தமிழ்நாடு

அதிமுகவுக்கு துரோகம் இழைத்தால்?: செங்கோட்டையனுக்கு EPS எச்சரிக்கை

Edappadi Palanisamy on Sengottaiyan : அதிமுகவுக்கு துரோகம் இழைக்கும் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.

Kannan

அதிமுகவிற்கு துரோகம்

Edappadi Palanisamy on Sengottaiyan : மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போது, செங்கோட்டையன் - தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மூன்று பேரை பற்றியும் பேசுவதே தேவையில்லாத ஒன்று கூறிய அவர், இவர்களின் குழிபறிப்பால் தான் 2021ல் அதிமுக தோல்வியை தழுவ நேரிட்டது என்று குற்றம்சாட்டினார்.

செங்கோட்டையனுக்கு எச்சரிக்கை

செங்கோட்டையனை நீக்க தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று கூறிய எடப்பாடி, கட்சிக்கு யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை இருக்கும் என்று எச்சரித்தார்.

மூவரும் திமுகவின் B Team

இரண்டு நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் பேசும் போது திமுக ஆட்சிக்கு வரும் என்கிறார். உண்மையான அதிமுக தொண்டனின் மனதில் இருந்து இந்த வார்த்தை வரவே வராது. எனவே ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூன்று பேரும் திமுகவின் ”பி” டீமாக செயல்பட்டு வருகிறார்கள் என்று எடப்பாடி கண்டனம் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி அமைக்கும்

ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது. களை நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருகிறது. 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்,என்றும் கூறினார்.

மேலும் படிக்க : தேவர் ஜெயந்தி, குருபூஜை : பசும்பொன்னில் துணை ஜனாதிபதி CPR மரியாதை

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை

அதிமுக - தவெக இடையில் இதுவரை எந்தவொரு கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தனது பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தொண்டர்கள் கொடி அசைத்ததாலேயே பிள்ளையார் சுழி போட்டதாக கூறினேன் என்றார். அதேசமயம் தேர்தல் நெருங்கும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மழையில் வீணான நெல் மணிகள்

டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணான விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினும், துறை அமைச்சரும் மாறுபட்ட தகவல்களை கூறுவதாகவும், விவசாயிகளை திமுக அரசு கைவிட்டு விட்டதாகவும் எடப்பாடி கண்டனம் தெரிவித்தார்.

=====