ADMK criticized TVK govt disappointing election promises lapse, slaps new labels on old schemes AI generated
தமிழ்நாடு

"பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டல்” : தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? : ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் : EPS விமர்சனம்!

பழைய திட்டங்களுக்கு புதிய ஸ்டிக்கர், தேர்தல் வாக்குறுதிகள் இல்லாத, ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தவெக அரசு தாக்கல் செய்து இருப்பதாக, அதிமுக விமர்சித்துள்ளது.

Kannan

தவெக அரசின் பட்ஜெட் தாக்கல்

தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சனை பட்ஜெட்டை தாக்கல் செய்து, அதில் இடம் பெற்று இருக்கும் அம்சங்களை வாசித்தார். 2 மணி நேரத்திற்கு மேலாக பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி கருத்து

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தவெக அரசின் பட்ஜெட் குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

முக்கிய அறிவிப்புகள் இல்லை

தவெக அரசின் பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. தவெக ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்களாகியும் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை.

வெற்று வசனங்கள் தான்

வெறும் வசனங்களை பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தவெக ஆட்சியில் ரீல்ஸ், மீம்ஸே சாதனையாக பார்க்கப்படுகிறது.

பெரிய ஏமாற்றம் தான்

சிறந்த பட்ஜெட்டை அறிவித்தோம் என்று முதல்வரும், அமைச்சர்களும் சொல்றாங்க, ஆனால் முக்கிய அறிவிப்புகள் இல்லை. பெரிய ஏமாற்றம் தான் இருக்கிறது.

வாக்குறுதிகள் என்னாச்சு?

தேர்தலின் போது தவெக வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து இருந்தது. மகளிருக்கு ரு. 2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், முதியோர் உதவித்தொகை உயர்வு, இளைஞர்களுக்கு உதவித்தொகை போன்றவை தொடர்பாக எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர்

அதிமுக செயல்படுத்திய பல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செஞ்சு அறிவிப்பு வெளியிட்டது தான் தவெக அரசின் சாதனை அப்படின்னு எடப்பாடி பழனிசாமி விமர்சிச்சு இருக்காரு.

மக்களை ஏமாற்றும் பட்ஜெட்

மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான எந்த முக்கிய அறிவிப்புகளும் இதில் இடம் பெறவில்லை.

அரசின் நிதிச் சுமை மற்றும் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்பதை சமாளிக்க என்ன வழிகள் என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

=================