ADMK Former Minister Vaigaichelvan's book "A Century of Penance" Released at Function held in Mumbai 
தமிழ்நாடு

’ஒரு நூற்றாண்டின் தவம்’ : வைகைச்செல்வன் நூல் வெளியீடு

ADMK Ex Minister Vaigaichelvan Book Release in Mumbai: முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனின் ஒரு நூற்றாண்டின் தவம் என்ற நூல், மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

Kannan

நூலாசிரியர் வைகைச்செல்வன் :

ADMK Ex Minister Vaigaichelvan Book Release in Mumbai : அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான எஸ்.எஸ். வைகைச்செல்வன், தற்போது அந்தக் கட்சியின் மாநில இலக்கிய அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். சிறந்த பேச்சாளரான அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவரது கட்டுரைகள் நாளிதழ்களில் வெளியாகி வருகின்றன. வானொலியிலும் பல்வேறு தலைப்புகளில் இவர் உரையாற்றி இருக்கிறார். இவற்றின் தொகுப்பு ஒரு நூலாக வடிவம் பெற்று இருக்கிறது.

’ஒரு நூற்றாண்டின் தவம்’ :

’ஒரு நூற்றாண்டின் தவம்’ என்ற தலைப்பில் அந்த நூல் வெளிவந்து இருக்கிறது. மும்பையில் நடைபெற்ற விழாவில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

கட்டுரைகள், பேச்சுக்களின் தொகுப்பு :

தினமணி நாளிதழில்(Dinamani Newspaper) வெளியான கட்டுரைகள் மற்றும் மதுரை வானொலியில் முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் ஆற்றிய உரைகளின் தொகுப்புதான் ஒரு நூற்றாண்டின் தவம் நூல்.

மகாராஷ்டிர ஆளுநர் வெளியிட்டார் :

நவி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ’ஒரு நூற்றாண்டின் தவம்’ புத்தகத்தை, மகாராஷ்டிர ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார் நவி மும்பை தமிழ் சங்கத்தால் நூல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.

மேலும் படிக்க : ஒட்டுப் போட்ட சட்டையில் மு. க. ஸ்டாலின்... - வைகைச்செல்வன் தாக்கு

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு :

தினமணி முதன்மை ஆசிரியர் கே.வைத்தியநாதன், தில்லி தமிழ்ச் சங்கச் செயலர் முகுந்தன், நவி மும்பை தமிழ்ச் சங்கத் தலைவர் இ.ஏஹாம்பரம், மீனாட்சி வெங்கடேஷ் உள்ளிட்டோர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.