அதிமுக கூட்டணி
EPS Campaign in Mylapore for TN Assembly Election 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது அதிமுக.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தொகுதிப் பங்கீடு
பாஜகவிற்கு 27, பாமகவிற்கு 18 தொகுதிகள் மற்றும் அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி தேர்தல் பிரசாரம்
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்குகிறார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அவர் பரப்புரை பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுப்பயண விவரத்தை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 25, 2026 முதல் ஏப்ரல் 1, 2026 வரை சுற்றுப் பயணம் நடைபெறுகிறது.
மயிலாப்பூரில் பிரசாரம்
சென்னை மயிலாப்பூரில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார்.
* மார்ச் 27 - காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், தாம்பரம்
* மார்ச் 28 - ஆர்.கே. நகர், திருத்தணி
* மார்ச் 29 - நாகர்கோவில், ராதாபுரம்
* மார்ச் 30 - கிழநெல்லி, கோவில்பட்டி
* மார்ச் 31 - சிவகாசி, பரமக்குடி
* ஏப்ரல் 1 - சிவகங்கை, புதுக்கோட்டை
ஏப்ரல் 1ம் தேதி பிறகான அடுத்தக்கட்ட சுற்றுப்பயண பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
===============