https://x.com/Kalyan1612
தமிழ்நாடு

திமுகவுக்கு எதிராக பேசினால் நெறியாளர்கள் பதறுவது ஏன் ?

தொலைக்காட்சி நெறியாளர்களின் சார்புத்தன்மையை அதிமுகவின் கல்யாண சுந்தரம் விமர்சித்துள்ளார்.

MTM

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழின் ஆசிரியர் கல்யாண சுந்தரம் தான கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நான் பேசுவதற்கு முன்னாள் 5 நிமிடங்கள் ஷாநவாஸ் பேசினார். பிறகு எனக்கு 5 நிமிடங்கள் வழங்கப்பட்டதாக நெறியாளர் சொல்கிறார். அதில் 2 நிமிடங்களுக்கு மேலாக அவர்தான் பேசிக் கொண்டு இருக்கிறார். திமுகவிற்கு சாமரம் வீசுவதுதான் உங்கள் ஊடகப்பணியா?

திமுக குறித்து, செந்தில்பாலாஜி, ஆகாஷ் பாஸ்கரன், ரத்திஷ், ஜுஜு உதயநிதி குறித்தெல்லாம் பேச தொடங்கினாலே நெறியாளர்கள் பதறுவது ஏன் ?

நீங்கள் எத்தனை தகிடுதத்தம் போட்டாலும் என்னை அழைக்க நீங்கள்தான் அஞ்சி நடுங்குகிறீர்களே ஒழிய உங்களை எதிர்கொள்ள நான் தயங்குவதில்லை.

இவ்வாறு அந்தப்பதிவில் கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.